கொவிட் தொற்று பரவல் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது...



டெல்டா மற்றும் கொவிட் தொற்று பரவல் தொடர்பிலான தகவல்களை மறைக்க 
வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. உண்மை தகவல்களை மறைத்தால் அரசாங்கமே நெருக்கடிகளை எதிர்க் கொள்ள நேரிடும் என தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் இணைபேச்சாளருமான ரமேஷ் பத்திரண, டெல்டா வைரஸ் பரவல் தீ விரமடைவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.

பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளது என்பதற்காக பொது மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட கூடாது என்றார்.


 அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நேற்று(6)   இடம் பெற்ற  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்
அவர், மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 மேலும் தெரிவித்த அவர், “கொவிட்-19 வைரஸ்   தொற்றாளர்களின்  எண்ணிக்கை  கடந்த 
காலங்களை காட்டிலும் தற்போது சடுதியாக குறைவடைந்த நிலையில் காணப்படுகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம்  பல்வேறு நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது” என்றார்.

சமூகத்தின் மத்தியில் டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது. ஆகவே, பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் டெல்டா  வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றார்.

டெல்டா வைரஸ் பரவல்  தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.  தொற்று   மற்றும்  திரிபடைந்த  டெல்டா வைரஸ் பரவல் தொடர்பிலான தகவல்களை சுகாதார அமைச்சு உத்தியோகப்பூரவமாக  நாளாந்தம் வெளியிடுகிறது. வைரஸ் தொடர்பிலான உண்மை தகவல்களை மறைத்தால் அதன் தாக்கம்  அரசாங்கத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். என்றார்.
கொவிட் தொற்று பரவல் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது... கொவிட் தொற்று பரவல் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய தேவை  அரசாங்கத்துக்கு கிடையாது... Reviewed by Madawala News on July 07, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.