சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தென்பட்டமை தொடர்பில் விளக்கம் இது தான்.



நாட்டின் தென்
பகுதியின் சில இடங்களில்
சூரியனைச் சுற்றி ஒளி
வட்டம் தென்பட்டுள்ளமை
அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பார்வையிடுவதற்கும்
மக்கள் ஆர்வம்
காட்டியிருந்தனர்.


இது தொடர்பில் கருத்து
வெளியிட்டுள்ள கொழும்பு
பல்கலைக்கழகத்தின்
பேராசிரியர் சந்தன ஜயரத்ன,
செல்லும்போது,

இந்த நிலைமைக்கு நாங்கள்
சூரிய மண்டலம் என்றே
பெயரிட்டுள்ளோம்.

நீராவிமேல் நோக்கி செல்லும்போது
அது பனி படிகங்களாக மாறும்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள
வானிலை மாற்றம் காரணமாக
உயர் வளிமண்டலத்தில்
மிகக் குளிர்ச்சியான சூழல்
நிலவுகிறது.


“இதனால் அங்குள்ள நீர்
சிறிய பனித்துகளாக மாறி,
சூரிய ஒளியை இவ்வாறு
திரிபடைய செய்து
வெளிப்படுத்துகிறது. அவை
சூரியனை சுற்றி வெள்ளை
வட்டத்தை ஏற்படுவதனை
அவதானிக்க முடியும்” எனத்
தெரிவித்துள்ளார்.

(படங்கள்:
சமூக வலைத்தளம்)

சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தென்பட்டமை தொடர்பில் விளக்கம் இது தான். சூரியனைச் சுற்றி ஒளி  வட்டம் தென்பட்டமை தொடர்பில் விளக்கம் இது தான். Reviewed by Madawala News on July 31, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.