துமிந்தவின் பொதுமன்னிப்புக்கு எதிராக ஹிருணிகா மனு தாக்கல் செய்தார். - Madawala News Number 1 Tamil website from Srilanka

துமிந்தவின் பொதுமன்னிப்புக்கு எதிராக ஹிருணிகா மனு தாக்கல் செய்தார்.பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பாக
 மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணான விடயம் என அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்து மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, குறித்த அடிப்படை உரிமை மனுவொன்றை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, குறித்த அடிப்படை உரிமை மனுவொன்றை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன், மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்தா சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறு ஹிருணிகா பிரேமச்சந்திர கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், நீதி அமைச்சர் உள்ளிட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துமிந்தவின் பொதுமன்னிப்புக்கு எதிராக ஹிருணிகா மனு தாக்கல் செய்தார். துமிந்தவின் பொதுமன்னிப்புக்கு எதிராக ஹிருணிகா மனு தாக்கல் செய்தார். Reviewed by Madawala News on July 21, 2021 Rating: 5