பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் நோய்களுக்கான பிரிவு சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது.



நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனையின் நிர்வாகத்தின் கீழும், தேசிய பாலியல் நோய்கள் மற்றும்

எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் வழிகாட்டலின் கீழும் இயங்கிவரும்,  பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் நோய்களுக்கான பிரிவு, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்த நிலையில், இன்று (20) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


கல்முனை பிராந்திய மேகநோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் கே.ஏ.சி.ஆர். விஜேசேகர மற்றும் கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் பிரிவின் மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.என்.எம். தில்ஷான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணண்  கலந்து கொண்டார் மேலும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண சமுக வைத்திய நிபுணர் டாக்டர் ஏ. அருள்குமரன் கலந்து கொண்டார். 


இந்நிகழ்வில் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.வீ. அப்துல் வாஜித், பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம் மாஹிர், பிராந்திய தாய்-சேய் நலப் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம். பஸால், பிராந்திய தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் என். ரமேஷ், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். அல்-அமீன் றிஷாட்,  சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே.ஷனூஸ் காரியப்பர்,உட்பட முக்கிய பிரமுகர்களும் கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் பிரிவின் ஊழியர்களும், தன்னார்வத் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் நோய்களுக்கான பிரிவு சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது. பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் நோய்களுக்கான பிரிவு சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது. Reviewed by Madawala News on July 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.