கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக


 நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.


நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.


இதனடிப்படையில், பிரேரணை 91 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் இலங்கையில் எரிபொருள் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு ஆளும் தரப்புக்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.


இவ்வாறான பின்னணியில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5