இன்றைய வானிலை அறிக்கை.... நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இன்றைய வானிலை அறிக்கை.... நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை.மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடைக்கிடையே மழை
 பெய்யக்கூடும்.

மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.

நாட்டை ஊடறுத்து மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் ஓரளவு பலத்த காற்று அடிக்கடி வீசக்கூடும்.

மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்
***************************

காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான அத்துடன் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தேசமானிய
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

இன்றைய வானிலை அறிக்கை.... நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை. இன்றைய வானிலை அறிக்கை.... நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை. Reviewed by Madawala News on July 21, 2021 Rating: 5