‘சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்’ – வேலுகுமார் - Madawala News Number 1 Tamil website from Srilanka

‘சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்’ – வேலுகுமார்சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள மலையக சிறுமியின் மரணத்துக்கு

 நீதி வேண்டும். தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இவை நடைபெறும்வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் திட்டவட்டமாக அறிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,


” நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சிறுமியொருவர் சந்தேகத்துக்கிடமான உயிரிழந்துள்ள சம்பவமானது சமூகப்பிரச்சினையாகும். அது சட்டம், ஒழுங்கு சார்ந்த பிரச்சினையும்கூட. எனவேதான் உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றோம்.


இந்நிலையில் எமது நடவடிக்கைகளுக்கு இனவாத சாயம்பூசி எம்மீது சேறுபூசுவதற்கு சில தரப்பினர் முயற்சித்துவருகின்றனர். இவ்விவகாரம் இனங்களுக்கிடையிலான பிரச்சினையோ அல்லது அரசியல் லாபம் தேடுவதற்கான களமோ கிடையாது. நீதி நிவாரணத்தையும், மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்குமான பயணமாகும்.


ரிஷாட் பதியுதீனை பழிக்கடாவாக்குவதற்கோ அல்லது அவரை பாதுகாப்பதற்கோ எமக்கு எவ்வித தேவைப்பாடும் கிடையாது.


அதேவேளை, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்ககூடாது. சிறார்களின் கல்வி பெறும் உரிமை பாதுகாக்கப்படவேண்டும். அந்தவகையில் இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு அதற்கான விழிப்புணர்வு திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.


சிறுமியின் மரணத்தை வைத்துகூட ஆளுந்தரப்பே இன்று அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றது. பொலிஸ் துறை உட்பட சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதற்கான கட்டமைப்பு அரச வசமே இருக்கின்றது. அதனை செயப்படுத்துவதைவிடுத்து வலியும் அரசியல் சுகம் காண்பதற்கு ஆளுந்தரப்பு முற்படுகின்றது. இதுவும் பெரும் அநீதியாகும்.” – என்றார்.

‘சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்’ – வேலுகுமார் ‘சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்’ – வேலுகுமார் Reviewed by Madawala News on July 21, 2021 Rating: 5