இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஹஜ்ஜுப் பெருநாள் கவியரங்கம்.



முழு மனித சமூகத்திற்கும் ஈமானிய பாடம் சொல்லிதந்து
 சன்மார்க்கத்தின் தாற்பரியத்தை தியாகத்தின் மூலம் முழு உலகிற்கும் கற்றுத்தரும் தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு இலங்கை வானொலி முஸ்லிம் சேவை புதன்கிழமை (21)  பெருநாள் தினத்தன்று காலை 10.05 க்கு பன்பலை 102.1 Mhz, 102.3Mhz இல்   ஹஜ்ஜுப் பெருநாள் கவியரங்கத்தை வழங்கிறது.


இந்தக்கவியரங்கிற்க்கு எழுத்தாளர், கவிஞர்  நாச்சியாதீவு பர்வீன் தலைமை தாங்குகிறார். அவரின் தலைமையில் இளம் கவிஞர்களான கல்முனை அறூபா அஹ்லா, கெக்குனுகொல்ல சப்ராஸ் அபூபக்கர், கிண்ணியா நசார் இஜாஸ், அநுராதபுரம் சீமா சைரீன், புத்தளம் -ஏத்தாலை சவ்துன் நிசா ஆகியோர் பங்கு கொள்கின்றனர். சிரேஷ்ட தயாரிப்பாளர் முஹம்மது ரலீன் இந்நிகழ்வை தயாரித்து வழங்குகிறார்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை தொடர்ந்தும் இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுத்து செயற்படுவதற்க்கு உந்து சக்தியாக விளங்கும் அதன் பணிப்பாளர் பாத்திமா ரினோஸா  பாராட்டுக்குறியவராவார்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஹஜ்ஜுப் பெருநாள் கவியரங்கம். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஹஜ்ஜுப் பெருநாள் கவியரங்கம். Reviewed by Madawala News on July 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.