இவ்வருடத்தில் மட்டும் இதுவரை 900 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.



(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த 7 மாதங்களில் 9 பில்லியன் ரூபா
 பெறுமதியான ஹெரோயின், ஐஸ் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் 40 பேர் உள்ளிட்ட சுமார் 15000 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள் ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இதுவரையான (நேற்று வரை) காலப்பகுதியில் 473 கிலோ கிராம். ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப் பட்டுள்ளது. இதேபோன்று 300 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள் ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி சுமார் 8 பில்லியன்க ளாகும். மேலும் 3485 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப் பட்டுள்ளதோடு இதன் பெறுமதி 72 கோடி ஆகும்.


ஹெரோயினுடன் தொடர்புடைய குற் றச்சாட்டில் இதுவரையில் 12890 சந்தேகந பர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய 1457 சந்தேகநபர்களும் கேரள கஞ்சாவுடன் தொடர்புடைய 8500 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின் , ஐஸ் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 9 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


சர்வதேச கடற்பரப்பிலிருந்து தெற்கு கடல் மார்க்கமாகவே இலங்கைக்கு பெருமளவான போதைப்பொருள் கடத்தப்படுவது இனங் காணப்பட்டுள்ளது. அத்தோடு கேரள கஞ்சா வடக்கு கடல் மார்க்கத்தின் ஊடாக அதி களவில் இலங்கைக்கு கடத்தப்படுகிறது.


இவ்வாறு கடல் மார்க்கமாக படகுகள் ஊடாக கடத்தப்படும் போதைப்பொருட்கள் மீட்கப் படும் போது அதனுடன் தொடர்புடைய 40 பிரதான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட வர்களில் படகினை செலுத்துபவர்கள் . அதி லுள்ள எளையோர் உள்ளிட்டோர் உள்ளடங் குகின்றனர்,

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட காலப்பகுதியில் அதிகளவிலான போதைப்பொருள் மீட்டுக்கப்பட்டுள்ள வருடமாக இந்த வருடம் காணப்படுகிறது.

இலங்கையில் பல பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இவ்வருடத்தில் மட்டும் இதுவரை 900 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் மட்டும் இதுவரை 900 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. Reviewed by Madawala News on July 31, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.