20 ஐ ஆதரித்தவர்கள் சும்மா இருக்கவில்லை... அரசுடன் இணைந்து ச‌மூக‌த்துக்காக அர்ப்ப‌ணிப்புட‌ன் ஈடுப‌டுகிறார்க‌ள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

20 ஐ ஆதரித்தவர்கள் சும்மா இருக்கவில்லை... அரசுடன் இணைந்து ச‌மூக‌த்துக்காக அர்ப்ப‌ணிப்புட‌ன் ஈடுப‌டுகிறார்க‌ள்.ஹ‌ஜ் பெருநாளின் போது குர்பான் கொடுத்த‌லில் அர‌சு 
எந்த‌ த‌டையையும் இதுவ‌ரை போட‌வில்லை.

ஆனாலும் சில‌ அதிகாரிக‌ள் ச‌ட்ட‌ம் தெரியாம‌ல் சில‌ இட‌ங்க‌ளில் குழ‌ப்பிக்கொண்ட‌துண்டு.

இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் Hafiz Naseer Ahamed M.P ஹாபிஸ் ந‌சீர் அஹ‌ம‌ட் எம் பி, Ishak Rahman MP இஸ்ஹாக் எம்பி ம‌ற்றும் எம‌து ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி என்ப‌ன‌ நேர‌டியாக‌ த‌லையிட்டு எந்த‌ப்பிர‌ச்சினையும் இன்றி குர்பான் கொடுக்க‌வும், முஸ்லிம்க‌ள் ச‌ந்தோச‌மாக‌ பெருநாளை கொண்டாட‌வும் கிடைத்த‌து.

இத‌ற்காக‌ ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பு என்ன‌ ந‌ன்மை செய்தாலும் அத‌ற்கு ந‌ன்றி தெரிவிக்காம‌ல் எதிர்ப்பு ஒன்றையே தொழிலாக‌ கொண்ட‌ முஸ்லிம் பெரும்பான்மை ந‌ன்றி சொல்லாவிட்டாலும் நாம் ந‌ன்றி சொல்கிறோம்.

மேற்ப‌டி இரு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளும் 20க்கு ஆத‌ரித்த‌து ச‌ரியா பிழையா என்ப‌த‌ற்க‌ப்பால் 20க்கு ஆத‌ரித்து அர‌சுட‌ன் இணைந்து விட்டு இவ்விருவ‌ரும் சும்மா இருக்க‌வில்லை என்ப‌தை நான் அறிவேன். இந்த‌ ச‌மூக‌த்துக்கு த‌ம்மால் என்ன‌ உத‌வி வ‌ழ‌ங்க‌ முடியுமோ அத‌ற்காக‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் ஈடுப‌டுகிறார்க‌ள் என்ப‌து உண்மை. அவ‌ர்க‌ளையும் நாம் எம‌து அர‌ச‌ ப‌ங்காளிக‌ளாக‌த்தான் பார்க்கிறோம்.


ஆக‌வே இந்த‌ ஹ‌ஜ்ஜுப்பெருநாளை எந்த‌வொரு இடையூறும் இன்றி கொண்டாட‌ வ‌ழி வ‌குத்த‌ ஜ‌னாதிப‌தி கோட்ட‌ப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கும், குர்பானி விட‌ய‌த்தில் ந‌ன்கு செய‌ற்ப‌ட்ட‌ பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கும், அர‌சுக்கு சார்பான‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளான‌ ஹாபிஸ் ந‌சீர் அஹ‌ம‌ட், இஸ்ஹாக் எம்பிக்கும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌ன‌து ந‌ன்றிக‌ளை தெரிவித்துக்கொள்கிற‌து.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்.
ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி. (உல‌மா)
20 ஐ ஆதரித்தவர்கள் சும்மா இருக்கவில்லை... அரசுடன் இணைந்து ச‌மூக‌த்துக்காக அர்ப்ப‌ணிப்புட‌ன் ஈடுப‌டுகிறார்க‌ள். 20 ஐ ஆதரித்தவர்கள் சும்மா இருக்கவில்லை... அரசுடன் இணைந்து ச‌மூக‌த்துக்காக அர்ப்ப‌ணிப்புட‌ன் ஈடுப‌டுகிறார்க‌ள். Reviewed by Madawala News on July 22, 2021 Rating: 5