அரபா தின உரை 2021 / 1442 ஹிஜ்ரி



உரை : ஷெய்க் கலாநிதி பன்தர் பின் அப்துல் அஸீஸ் பலீலா

தமிழில் : U.K .றமீஸ்

புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியது. 

பெரும் செல்வந்தனான கொடை வள்ளலான உனக்கே அனைத்து புகழும் உரியது. 

அனைவருக்கும் நலன்கள் புரிபவனே! 

மகத்தான சிறப்புகளை தன்னகத்தே வைத்திருப்பவனே!

நாடியவர்களை நேரான பாதையின்பால் வழிகாட்டுபவன். 

அவனது தொடரான அருள்களுக்காகவும் அவன் சொரிகின்ற நிஃமத்களுக்காகவும் அவனை நாம் புகழ்கிறோம். 

அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லையென்றும், அவன் ஒருவன், அவனுக்கு இணையாக யாரும் இல்லையென்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார் என்றும் சான்று பகர்கிறேன். அவரின் மீதும் அவரது குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

முஃமின்களே!

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவதன் ஊடாக அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள். 

அப்போது மகத்தான வெற்றியை நீங்கள் அடையலாம். உங்களது மறுமை, உலக விடயங்களில் வெற்றி பெறலாம் இதனையே அல்லாஹ் 

'(முத்தகீன்கள்) இறையச்சமுள்ளவர்களுக்கு சார்பாகவே விளைவுகள் அமையும்' என்று குறிப்பிடுகிறான் 

'நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்கள், மற்றும் முஹ்ஸின்களோடு (சிறந்தவர்கள், நல்லவர்கள்) உடனிருக்கிறான்' 

'யார் அல்லாஹ்வுக்கு அஞ்சி பொறுமையுடன் நடந்துகொள்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் நல்லவர்களின் (முஹ்ஸின்) கூலியை வீணடிப்பதில்லை'

அல்லாஹ் இஹ்ஸான் - நல்லது செய்தல், நன்றாக செயல்படல், அல்லாஹ் பார்க்கிறான் என்ற உணர்வுடன் செயல்படல் - போன்ற விடயங்களை ஏவியுள்ளான்

'நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பது, நல்லமுறையில் நடந்துகொள்வது, உறவினர்களுக்கு கொடுப்பது, போன்ற விடயங்களை உங்களுக்கு ஏவியுள்ளான்'

எனவே 

அடியான் நல்ல முறையில் அழகிய முறையில் அல்லாஹ்வை வணங்குகிறான். இதனையே நபியவர்கள் 'இஹ்ஸான் நல்ல முறையில் நடப்பது என்பது நீங்கள் அல்லாஹ்வை பார்த்துக்கொண்டிருப்பது போன்று அவனை வணங்குவதாகும். அவனை நீங்கள் பார்க்காவிட்டாலும் அவன் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறான்' (புகாரி முஸ்லிம்) என்றார்கள்

ஏகத்துவ நம்பிக்கையில் இஹ்ஸானாக நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்

வணக்கங்களை அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்வதில் (இஹ்ஸான்) நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும்.

'யார் தனது முகத்தை இஹ்ஸானான நிலையில் (நல்ல நிலையில்) அல்லாஹ்வின்பால் திருப்புகின்றானோ அவன் பலமான கயிற்றை பற்றிப் பிடித்துவி;டான்'

'யார் தனது முகத்தை இஹ்ஸானான நிலையில் (நல்ல நிலையில்) அல்லாஹ்வின்பால் திருப்புகின்றானோ அவனுக்கு அவனது ரப்பிடம் கூலி இருக்கிறது. அவன் அஞ்சவோ கவலைப்படவோ தேவையில்லை' என்கிறான்

அவன் அல்லாஹ்வை மாத்திரமெ வணங்குவான், அவனிடம் மாத்திரமே உதவி தேடுவான். 

'அவனையே வணங்குமாறு அவன் கட்டளையிட்டுள்ளான்'

ஐநேர தொழுகைகளை பேணிக்கொள்வதும் இஹ்ஸான் என்ற விடயத்துடன் தொடர்பானது.

'நீங்கள் தொழுகைகளை பேணிக்கொள்ளுங்கள்..'

ஸகாத், நோன்பு. ஹஜ் போன்ற இபாதத்களிலும்சிறப்பாக நாம் நடந்தகொள்ள வேண்டும்.

மலக்குகள், மறுமை நாள், நபிமார்கள், வேதங்கள், கத்ர் போன்ற நம்பிக்கை கொள்ளவேண்டிய விடயங்களை நம்புவதும் இஹ்ஸான் ஆகும்

ஒரு முஃமின் எப்படி இஹ்ஸான் என்ற விடயத்தை பேணாது இருக்க முடியும்

அல்லாஹ் மனிதனுடன் நல்லமுறையில் நடந்துகொள்கின்ற நிலையில் மனிதன் எப்படி அவனுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளாது இருக்க முடியும்.

அல்லாஹ் அருள்களை பிரவாகிக்க செய்திருக்கிறான். இவை அவன் செய்த இஹ்ஸான்கள்.

'வானங்களில் உள்ளவற்றையும் பூமில் உள்ளவற்றையும் அவன் வசப்படுத்தி கட்டுப்படுத்தி தரவில்லையா? வெளிப்படையான உள்ரங்கமான அருள்களை அவன் பிரவாகிக்க செய்யவில்லையா?

'அவன் மனிதனை அழகான உருவில் படைக்கவில்லையா'?

'அவன்தான் நல்லமுறையில் - அழகான முறையில் - மனிதனை படைத்தான்'

வேதங்களை இறக்கி அவற்றை விளக்கிவைக்க நபிமார்களை அனுப்பியது அல்லாஹ் மனிதர்;களுக்கு செய்த ஒரு இஹ்ஸான்

குர்ஆனை முஹம்மத் நபிக்கு வழங்கியது ஒரு இஹ்ஸான்

'அல்லாஹ் அழகிய வார்த்தைகளை வேதமாக இறக்கியுள்ளான் அது உள்ளத்தை சிலிர்க்க வைக்கிறது'

மனிதன் ஏனைய படைப்புகளுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறு ஏவப்பட்டுள்ளான்.

'அல்லாஹ் உங்களுடன் அழகாக நல்ல முறையில் இஹ்ஸானாக நடந்துகொள்வது போன்று நீங்களும் அழகாக நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் உலகில் அட்டூழியம் செய்ய வேண்டாம். அல்லாஹ் குழப்பம் செய்வதை விரும்புவதில்லை'

மனிதன் அவனுடன் தொடர்புபடும் அனைத்துடனும், அனைவருடனும் நல்லமுறையில் அழகாக இஹ்ஸானாக நடந்துகொள்ள வேண்டும்

'பெற்றோர்களோடு, உறவினர்கள், யதீம்கள், மிஸ்கீன்கள், அயலவர்கள், பயனிகள், பாதையே கதியானவர்கள் பாதைப் பிள்ளைகள் போன்றவர்களோடு நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள். அல்லாஹ் பெருமையடிப்பவர்களை விரும்புவதில்லை'

பிள்ளை வளர்ப்பதுகூட இஹ்ஸான்தான், சமூக விடயங்களில் ஈடுபட்டு அவர்களை பலப்படுத்த எடுக்கும் முனைப்பும் முயற்சிகளும் இஹ்ஸான்தான், கணவன் மனைவிக்கு, தலாக் சொல்லப்பட்டவளுடன் நல்ல முறையில் அழகாக நடப்பது, மனைவி கணவனுடன் நல்லமுறையில் நடப்பது போன்றவைகளும் இஹ்ஸான் என்ற நல்ல முறையில் நடந்துகொள்ளவேண்டிய விடயங்களே.

'நீங்கள் நல்வமுறையில் நடந்து அல்லாஹ்வக்கு பயந்து நடந்தால் நீங்கள் செய்வது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்'

பலவீனர்கள், அநாதைகளுடன் நல்லமுறையில் நடக்க வேண்டும்

'யதீம்களுடைய சொத்து விடயத்தில் நல்ல முறையிலன்றி வேறுவிதமாக நெறுங்க வேண்டாம்'

பணியாளர்களுடன் நல்ல முறையில் நடக்கவேண்டும் என்பதும் இறை கட்டளையாகும். அவர்களுடனான தொழில் ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள், நாட்டு நலன்கள், மக்கள் நலன்கள், நாட்டின் இஸ்திர தன்மைக்காக உழைப்பது, தமது கடமைகளை பணிகளை பொறுப்புடன் சரியாக நிறைவேற்றுவது, ஒழுங்குகளை பேணிக்கொள்வது, மக்கள் உயிர்களை பாதுகாப்பது, பாவமற்ற விடயங்களில் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுவது, குழப்பம் விளைவிக்காதிருப்பது, அடுத்தவர்களை நோவினை செய்யாதிருப்பது, பயங்கரவாதத்துக்கு அனுசரனை வழங்காதிருப்பது போன்ற விடயங்களிலும் நல்ல முறையில் சிறப்பாக நாம் நடந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

மிருகங்களுடன் கூட நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும்

'நீங்கள் ஒரு வேலையை செய்தால் அழகாக செய்யுங்கள் - மிருகங்களை அறுப்பதாக இருந்தால் நல்ல முறையில் அறுத்து விடுங்கள் கத்தியை கூர்மையாக்கிக்கொள்ளுங்கள் (ஹதீஸ்)

ஒரு முஸ்லிம் சூழலுடனும் நல்ல முறையில் அழகாக நடந்துகொள்வான்

'விவசாயத்தையும் பரம்பரைகளை அழிப்பதை கண்டிக்கிறான்- அல்லாஹ் இத்தகைய அழிவுவேலைகளை விரும்பமாட்டான்'

முஸ்லிமல்லாதவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

'மிஸ்கீன்கள் அநாதைகள் கைதிகளுக்கு உணவு வழங்குவார்கள்'

எதிரியுடன்கூட நல்ல முறையில் நடக்க வேண்டும் 

'தீயவற்றை நல்லவற்றால் தடுத்துவிடுங்கள்'

கொடுக்கல் வாங்களில் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்  'நீங்கள் அளந்தால் நீதியாக நடந்துகொள்ளுங்கள். இதுவே மிக சிறந்தது'

அனைத்து படைப்புகளுடனும் அழகாக பேசுவது

'மனிதர்களுக்கு நல்லதையே சொல்லுங்கள்'

தஃவா – அழைப்பு பணியில் நல்ல முறையில் நடப்பதும் இஹ்ஸான் ஆகும்.

'இறைவனின் பாதையின்பால் அறிவு பூர்வமாக அழகிய உபதேசம் மூலமாக அழைப்பு விடுங்கள். எது அழகிய முறையோ அம்முறையில் தர்க்கம் புரியுங்கள்'

ஆழகிய வார்த்தைகள், வாழ்த்துரைகள் முகமன்கள்

'நீங்கள் வாழ்த்தப்பட்டால் அதனை விட சிறப்பாக வாழ்த்துங்கள்'

மனிதர்களின் தீங்களை பொறுத்துக்கொள்வது கூட இஹ்ஸான் என்ற விடயத்தில்  வருகின்றது 

'பொறுமையை கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் சிறப்பாக செயல்படுகின்றவனின் - முஹ்ஸின் - கூலியை வீணடிப்பதிலலை

முஃமினது பேச்சும் செயலும் நல்லதாக சிறப்பானதாக காணப்படும். 

'சொல்லப்படும் விடயத்தை செவிமடுத்து சிறப்பாக செயல்படுகின்ற அடியானுக்கு நன்மாராயணம் கூறுங்கள். இவர்கள்தான் அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். இவர்கள்தான் அறிவுள்ளவர்கள்'

போட்டி போடவேண்டிய போட்டிக்குரிய இடம் இஹ்ஸான் (அழகாக செயல்படுதல்) என்பதை முஃமின் அறிந்துவைத்திருப்பான்

'அவன் வாழ்வையும் மரணத்தையும் படைத்தது உங்களில் யார் சிறப்பாக செயல்படுகின்றீர்கள் என்பதை சோதிப்பதற்காகத்தான்'

முஃமின் அல்லாஹ்வுடனான உறவை சிறப்பாக பேணுவான் மனிதர்களுடனான உறவையும் சிறப்பாக அமைத்துக்கொள்வான் படைப்புகளுடனான உறவையும் சிறப்பாக்கிக்கொள்வான். இதன் மூலம் தனக்குத்தானே நன்மை செய்துகொள்கிறான். இதனூடாக அல்லாஹ்வின் நேசத்தையும் அவன் உடனிருப்பதையும் அடைகின்றான். ஆல்லாஹ்வை நெறுங்குகிறான். 

'நீங்கள் ஒரு நல்ல விடயத்தை செய்தால் உங்களுக்கு நீங்களே நல்லதை செய்துகொள்கிறீர்கள்'

'நீங்கள் நல்லது செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நல்லது செய்பவர்களை விரும்புகிறான்'

'நல்லது செய்பவர்களோடு அல்லாஹ் இருக்கிறான்'

'நிச்சயமாக அல்லாஹ் நல்லது செய்பவர்களோடு இருக்கிறான்'

'அல்லாஹ்வுடைய அருள் நல்லது செய்பவர்களுக்கு நெறுக்கமாக உள்ளது'

'நிச்சயமாக அல்லாஹ் நல்லது செய்பவர்களின் கூலியை வீணாக்கி விடுவதில்லை' 

'இந்த உலகத்திலே நல்லது செய்கின்றவர்களுக்கு மறுமையில் நலன்கள் காணப்படும்'

நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் தோட்டங்களிலும் நீர்ச்சுனைகளுடனும் இருப்பார்கள். அவர்களது இறைவன் கொடுத்ததை எடுத்து அநபவித்தக்கொண்டு இருப்பார்கள். இதற்கு முன்னர் அவர்கள் நல்லது செய்பவர்களாக (முஹ்ஸின்) இருந்தார்கள்'

'அவர்களுக்கு தாம் விரும்புவது தமது இரட்சகனிடத்தில் இருக்கும். இது நல்து செய்தவர்களுக்கான கூலியாகும்'

 'நல்லது செய்தவர்களுக்கான கூலி நல்லதாகவே இருக்கும்'

'கூலிகள் பன்மடங்காகும். ஓவ்வொரு நல்ல செயலுக்கும் 10 முதல் 700 மடங்கு அதிகமாக நன்மை கிடைக்கும்'

'நல்ல விடயங்கள் பாவங்களை போக்கிவிடும்'

நல்ல மனிதர்களே உங்களை நான் வாழ்த்துகிறேன்

யா அல்லாஹ் உன்னை நம்பிய உனது அடியார்களுக்கு நீ நல்லது செய்வாயாக!

அவர்களை நல்லது செய்யக்கூடியவர்களாக ஆக்குவாயாக!

அவர்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவாயாக!

அவர்களை சத்தியத்திலே இணைத்து வைப்பாயயாக!

அவர்களது உள்ளத்தை சீராக்கிவிடுவாயாக!

அரபா தின உரை 2021 / 1442 ஹிஜ்ரி  அரபா தின உரை 2021 /  1442 ஹிஜ்ரி  Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.