2005ஆம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ச, ஆசியாவில் மிகவும் வேகமாக அபிவிருத்தியடையும் நாடாக இலங்கையை மாற்றினார்.அமைச்சரவையும் துறைசார். அமைச்சரும் இணைந்தே
 எரிபொருள்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்ததாகவும், இந்தத் தீர்மானம் தற்காலிமானது என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் சுலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எமது நாட்டில் அமையப்பெற்றிருந்த ஒவ்வொரு அரசாங்கங்களும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன.

 2005ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது 80இற்கும் குறைவான அமைச்சர்களே இருந்தனர். என்றாலும் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்டவர்களை இணைத்துக்கொண்டு
அரசாங்கமொன்றை அமைத்ததுடன், விடுதலைப் புலிகளையும் தோற்கடித்திருந்தார். யுத்தத்தின் பின்னர்

பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கையெடுத்ததுடன், மறை பொருளாதார வளர்ச்சியை நேர் வளர்ச்சியாக்கினார்.


நாட்டில் வேலைவாய்ப்பின்மை சதவீதத்தையும் குறைத்திருந்தார். ஆசியாவில் மிகவும் வேகமாக அபிவிருத்தியடையும் நாடாகவும் இலங்கையை மாற்றினார்.


தொற்றுக் காலப்பகுதியில் அரசாட்சியை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. என்றாலும் இந்த சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளதுடன், பொருளாதாரத்தையும் பாதுகாத்துள்ளோம்.


உலகில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழலில் நிறுவனங்களுடன் பேசி வேலைவாய்ப்புகளை பாதுகாக்க முடிந்துள்ளது. அந்நிய செலாவணியை பாதுகாத்துள்ளோம். அதேபோன்று கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டமும்

முன்னெடுக்கப்படுகிறது.

இவை அனைத்து சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதியின் 10 அபிவிருத்தி திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.

கூட்டணி அரசாங்கத்தில் பல்வேறு கொள்கைகளை பின்பற்றும் நபர்கள் இருக்கின்றனர்.


பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. அதேபோன்று கட்சிகளுக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை தெரிவிக்க CLICK Link 👇

2005ஆம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ச, ஆசியாவில் மிகவும் வேகமாக அபிவிருத்தியடையும் நாடாக இலங்கையை மாற்றினார். 2005ஆம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்ற  மஹிந்த ராஜபக்ச, ஆசியாவில் மிகவும் வேகமாக அபிவிருத்தியடையும் நாடாக இலங்கையை மாற்றினார். Reviewed by Madawala News on July 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.