20 க்கு கை உயர்த்திய எமது வக்கற்ற அரசியல்வாதிகளால் கல்முனை RDHS பிராந்தியத்திற்கு ஒரு தடுப்பூசியை கூட பெற்றுத்தர முடியவில்லை.



- ஏ.பி.எம்.அஸ்ஹர்-

கல்முனை RDHS பிராந்திய 0% கொரோனா தடுப்பூசி;வக்கற்ற அரசியலின்

குறியீடு என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்  ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


அம்பாரையின் சனத்தொகையும் ஹம்பாந்தோட்டை சனத்தொகையும் ஏறத்தாள சமமானவை. ஆனால்;

 ஹம்பாந்தோட்டையில் 45% கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுவிட்டது.

 அம்பாரையில்  வெறும் 07% மட்டுமே கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இதை நாமல் ராஜபக்‌ஷவே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

 

அதில், முஸ்லிம், தமிழர்கள் செறிந்து வாழும் கல்முனை RDHS பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டமை பூச்சியம்% என்பதே இதிலுள்ள சுவாரசியமான விடயம்.


மில்லியன் கணக்கில் தடுப்பூசிகள் வந்திறங்கியும் கல்முனை RDHS பிராந்தியத்திற்கு 0 வீதம் எனின் - அதற்கு காரணங்கள்;

ஒன்று அப்பட்டமான பாராமுகமும் இனவாதமும் 

மற்றையது வக்கற்ற அரசியல்வாதிகள்


20க்கு கையுயர்த்திய நமது செயல் வீரர்கள்; கல்முனை RDHS பிராந்தியத்திற்கு தடுப்பூசி வழங்குமாறு பிரதமரை சந்தித்து உடன் ஓடர் போட வைத்ததாகவும் - அவசரமாக தடுப்பூசி வழங்கப்படும் எனவும் 

கடந்த ஜூன் மாதம் 08ஆம் திகதி தமது முகநூலிலும் 

அதே மாதம் 10 ஆம் தினகரன் பத்திரிகையின் முன்பக்கத்திலும் - மக்களை ஏமாற்றும் படங்காட்டுவதற்காக செய்தி போட்டிருந்தனர்.



ஆனால், சரியாக ஒரு மாதம் கழித்து அதாவது இந்த மாதம் 09ஆம் திகதி - ஜனாதிபதி தலைமையில் எந்த எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு தடுப்பூசிகளை வழங்குவதென தீர்மானித்து - பட்டியலும் வெளியானது. அதில் ஒன்றுகூட கல்முனை RDHS பிராந்தியத்திற்கு (அம்பாரை) வழங்கப்படுவதாக தீர்மானிக்கப்படவில்லை. 

(ஆதாரம் கீழே )


இந்த வக்கற்ற அரசியல்வாதிகளால் - மில்லியன் கணக்கில் அரசினால் கொண்டுவரப்பட்டு ஏற்றப்படும் தடுப்பூசிகளில் - ஒன்றை கூட நமக்காக பெற்றுத் தர முடியாது எனின் - இவர்களால் வேறு என்னதான் முடியப்போகிறது?


20க்கு கையுர்த்தி - நமது உடலையும் உயிரையும் அடமானம் வைத்து விட்டனர். அதனை முன்பு ஜனாஸா எரிப்பில் கண்டோம். இன்று தடுப்பூசி விடயத்தில் காண்கிறோம். இதுதான் நிஜம்.




20 க்கு கை உயர்த்திய எமது வக்கற்ற அரசியல்வாதிகளால் கல்முனை RDHS பிராந்தியத்திற்கு ஒரு தடுப்பூசியை கூட பெற்றுத்தர முடியவில்லை. 20 க்கு கை உயர்த்திய எமது வக்கற்ற அரசியல்வாதிகளால்  கல்முனை RDHS பிராந்தியத்திற்கு ஒரு தடுப்பூசியை கூட பெற்றுத்தர முடியவில்லை. Reviewed by Madawala News on July 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.