அரிசிகளின் விலைகளை 20 முதல் 30 ரூபா வரையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.



நாட்டில் அரிசி வகைகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை
 மேற்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


அதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களில் அரிசிகளின் விலைகளை 20 முதல் 30 ரூபா வரையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


அவ்வாறு விலைகளை குறைந்து விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், 2000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரிசிகளின் விலைகளை 20 முதல் 30 ரூபா வரையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அரிசிகளின் விலைகளை 20 முதல் 30 ரூபா வரையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். Reviewed by Madawala News on July 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.