எமது நல்லாட்சியில் ஆசிரியர்கள் உட்பட சகல அரச உத்தியோகத்தர்களினதும் அடிப்படைச் சம்பளத்தை 100 சதவீதம் அதிகரித்து எரிபொருள் விலைகளை கனிசமான அளவு குறைத்திருந்தோம்.



- ஹஸ்பர் ஏ ஹலீம்_

சில கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்களது கோரிக்கை நியாயமானது என்பதால் இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று (30) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


நாம் எமது நல்லாட்சி அரசு காலத்தில் ஆசிரியர்கள் உட்பட சகல அரச உத்தியோகத்தர்களினதும் அடிப்படைச் சம்பளத்தை 100 சதவீதம் அதிகரித்தோம். முன்னைய அரசு அதிகரித்து வைத்திருந்த எரிபொருள், சமையலறை எரிவாயு என்பவற்றின் விலைகளைக் கனிசமான அளவு குறைத்திருந்தோம். ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டன. சகல மருந்துப் பொருட்களினது விலைகளும் குறைக்கப்பட்டன.


இதனால் அரச உத்தியோகத்தர்கள் கடனின்றி சம்பளத்துள் சமாளித்து வாழும் நிலை உருவாக்கப்பட்டது. ஏனையோரும் தமது வருமானத்துக் கேற்ப வாழும் நிலை உருவாக்கப்பட்டது.


இதற்கு மேலதிகமாக சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் மற்றுமொரு சம்பள அதிகரிப்புக்கான அமைச்சரவைப் பத்திரமும் எமது அரசு காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


இந்த அரசு ஆட்சிக்கு வந்ததும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தை இரத்து செய்தது.   சகல பொருட்களினதும் விலைகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மக்கள் மீது பெருஞ் சுமைகள் திணிக்கப்பட்டுள்ளது. தமது சம்பளத்துள் வாழ முடியாத சூழ்நிலை அரச உத்தியோகத்தர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ஆசிரியர்கள் தமது அந்தஸ்தை உறுதிப் படுத்தும் வகையிலும், நாட்டின் ஜனநாயகக் கல்வி முறையை உறுதிப் படுத்தும் வகையிலும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களது இந்த ஜனநாயகப் போராட்டத்துக்கும் அரசினால் இடையூறு செய்யப்பட்டது. இது கவலைக்குரிய விடயமாகும்.


எனவே, ஆசிரியர்களது இந்த நியாயமான கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் திருப்திப் படும் வகையில் தீர்வினை முன்வைக்க வேண்டும்.

எமது நல்லாட்சியில் ஆசிரியர்கள் உட்பட சகல அரச உத்தியோகத்தர்களினதும் அடிப்படைச் சம்பளத்தை 100 சதவீதம் அதிகரித்து எரிபொருள் விலைகளை கனிசமான அளவு குறைத்திருந்தோம். எமது நல்லாட்சியில் ஆசிரியர்கள் உட்பட சகல அரச  உத்தியோகத்தர்களினதும் அடிப்படைச் சம்பளத்தை 100 சதவீதம் அதிகரித்து எரிபொருள் விலைகளை  கனிசமான அளவு குறைத்திருந்தோம். Reviewed by Madawala News on July 31, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.