எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படாதிருந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வாழ்க்கைச் செலவும் பல மடங்கு அதிகரித்து இருக்கும்.



ஜனாதிபதி, பிரதமரின் இணக்கப்பாட்டுடன் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு, தன்னை மாத்திரம் சிலர் விமர்சிப்பதாகத் தெரிவிக்கும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பெயர்களைக் கூறி, அவர்களை விமர்சிப்பதற்கு முதுகெலும்பு இல்லாதவர்களே இவ்வாறு தன் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என்றார்.



வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், எரிபொருள்களின் விலை அதிகரிப்புத் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அறிவித்து, வரலாற்றில் வேறெந்த அமைச்சர்களும் முகங்கொடுத்திராத சவாலுக்கு நான் முகங்கொடுத்துள்ளேன். அரசாங்கத்தைப் பாதுகாப்பது, அரசாங்கத்தில் உள்ள சிலருக்குப் பிரச்சினை என்றால், அரசாங்கத்தின் எதிரிகள் அரசாங்கத்துக்குள்ளேயே இருப்பது இதனூடாகத் தெளிவாகின்றது.

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படாதிருந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வாழ்க்கைச் செலவும் பல மடங்கு அதிகரித்து இருக்கும். எரிபொருள்களின் விலை அதிகரிப்புத் தொடர்பில், என்னை விமர்சிப்பவர்கள். அதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

இதேவேளை, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தமையால் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. நாட்டுக்குக் கிடைத்து வந்த அந்தியச் செலாவணியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமானவே, எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டது.


இதுவே எரிபொருள்களின் விலை அதிகரிப்புக்குப்
பிரதான காரணம் எனவும் தெரிவித்தார்.
எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படாதிருந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வாழ்க்கைச் செலவும் பல மடங்கு அதிகரித்து இருக்கும். எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படாதிருந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வாழ்க்கைச் செலவும் பல மடங்கு அதிகரித்து இருக்கும். Reviewed by Madawala News on June 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.