தடுப்பு காவலில் உள்ள முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி. - Madawala News Number 1 Tamil website from Srilanka

தடுப்பு காவலில் உள்ள முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி.தடுப்பு காவலில் உள்ள முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


முன்னதாக 
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிணை கோரிக்கை தொடர்பான மனு மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஷ்சங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர்நேற்று அறிவித்து இருந்தனர்.


2013 ஆம் ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் குறித்து பேலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


இவர்கள் இருவரும் பிணை கோரி, கம்பஹா நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் முன்னர் நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தடுப்பு காவலில் உள்ள முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி. தடுப்பு காவலில் உள்ள முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி. Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5