இரத்த தானம் மூலம் இலங்கை கொடியை உயரத்தில் பறக்க விட்ட குவைத் வாழ் இலங்கையினர்.



உலக இரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. குவைத் மத்திய இரத்த வங்கி ஆண்டு தோறும் அதிக இரத்த தானம் செய்த சமூகங்களையும், அமைப்புக்களையும், தனி மனிதர்களையும் இத்தினத்தில் கௌரவிக்கின்றது.

அந்த வகையில் 2020-2021 ஆண்டில் அதிக இரத்த தானம் செய்த இலங்கை அமைப்புக்களான இக்ரஃ இஸ்லாமிய சங்கம் ( IIC Kuwait ), செயலானீஸ் உதவும் கரங்கள் (SHHK ) ஆகிய இரண்டும் பட்டியல் படுத்தப்பட்டு உலக இரத்த தான தினமான இன்று கௌரவிக்கப்பட்டுள்ளனர் . குவைத் மத்திய இரத்த வங்கியால் இலங்கையர்கள் இவ்வாறு கௌரவப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.


இந்த இரத்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் கெளரவ U. L. M Jauhar அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் விஷேட அதிதிகளாக தூதரக உயர் அதிகாரி W. A. U. Poshitha Perera, சங்கைக்குரிய பிதா. Ivan Antony Perera, குவைத் மத்திய இரத்த வங்கியின் பொறுப்பாளர் Dr. Asma அவர்கள் மற்றும் Dr. M.U.L.M. Nawras உள்ளிட்ட குவைத் நாட்டில் பணி புரியும் இலங்கை வைத்தியர்கள் குழு, குவைத்தில் இயங்கும் இலங்கை, இந்திய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதே போல் நூற்றுக்கணக்கானோர் ஜாதி, இன, மத பேதமின்றி இரத்த தானம் செய்தனர்.

இந்த இரத்த தான நிகழ்வு குவைத் வாழ் இலங்கையர்கள் குவைத் நாட்டுக்கு செய்யும் நன்றிக் கடனாகவும், எங்கள் தாய்நாட்டுக்கு செய்யும் ஒரு கெளரவமாகவும் இருந்தது. இவ்வாறான மனித நேயப் பணிகள் நாடுகளுக்கிடையேயும், இனங்களுக்கிடையேயும் நல்லுறவை ஏற்படுத்தி சக வாழ்வை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

கடைசியாக இந்த நன்மையான விடயத்துக்கு பங்களிப்பு செய்த, கலந்து சிறப்பித்த, சகல விதத்திலும் உதவி ஒத்தாசைகள் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இக்ரஃ இஸ்லாமிய சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு அனைவருக்கும் ஆரோக்கியமான நல்வாழ்வை பிரார்த்தித்து நிற்கின்றது.

இக்ரஃ இஸ்லாமிய சங்கம்,
குவைத்


--
Harees Salih
இரத்த தானம் மூலம் இலங்கை கொடியை உயரத்தில் பறக்க விட்ட குவைத் வாழ் இலங்கையினர். இரத்த தானம் மூலம் இலங்கை கொடியை உயரத்தில் பறக்க விட்ட குவைத் வாழ் இலங்கையினர். Reviewed by Madawala News on June 15, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.