இன்று சில மாவட்டங்களில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை...



 மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை

மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km  வேகத்தில் காற்று  வீசும். 


இப் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் வீசக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் 

**************************


புத்தளம்  தொடக்கம்   கொழும்பு, காலி,மாத்தறை  ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் தென்  மேற்குத் திசையில் இருந்து  காற்று வீசும்.


மாத்தறை தொடக்கம்  ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான  அத்துடன் புத்தளம்  தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.


இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.


ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


தேசமானிய 

மொஹமட் சாலிஹீன் 

சிரேஸ்ட வானிலை அதிகாரி.  

இன்று சில மாவட்டங்களில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை... இன்று சில மாவட்டங்களில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை... Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.