சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என்பது உண்மை... ஆனால், அது எப்போது நடக்கும்னு எனக்கு தெரியாது.



கவலையாக இருந்தாலும், எரிபொருளின் விலையை அதிகரிக்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் நிதி  இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என்பது உண்மை . ஆனால், அது எப்போது நடக்கும்னு  தனக்குத் தெரியாதெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அஜித் நிவாட் கப்ரால், மக்கள் சிரமத்தில் இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும். 

மக்களின் கஷ்டங்கள் எமக்குப் புரியும். இவ்வாறான சூழ்நிலையிலேயே சிரமமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. 

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளின் விலையை அதிகரிக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். கவலையாக இருந்தாலும் எரிபொருளின் விலை அதிகரிக்க வேண்டியுள்ளது.


கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தற்போதும் இருந்திருந்தால், எரிபொருளின் விலைகள் இன்னும் அதிகரித்திருக்கும். எரிபொருளின்விலை அதிகரிப்புடன் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்க உள்ளது. அதிக விலையை செலுத்தி எரிவாயுவைக் கொள்வனவு செய்து, குறைந்த விலைக்கு வழங்க முடியாது. ஆனால், இதனையே எரிவாயு நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன.


எனவே, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமென்பது உண்மை . ஆனால், அது எப்போது என எனக்குத் தெரியாதெனவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என்பது உண்மை... ஆனால், அது எப்போது நடக்கும்னு எனக்கு தெரியாது. சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என்பது உண்மை... ஆனால், அது எப்போது நடக்கும்னு எனக்கு தெரியாது. Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.