அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா பிரேரணை.



எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில செயற்பாடுகளுக்காக

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.



கொரோனா தொற்றினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அதலிருந்து மக்களை மீட்பதற்கு பதிலாக எரிபொருள் விலையை அதிகரித்து, அரசாங்க மக்களை மேலும் சிரமங்களுக்கு உள்ளாக்குவதனால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.



எரிபொருள் விலை அதிகரிப்பை முக்கியமாகக் கொண்டும் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காமை ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



அடுத்து நாடாளுமன்ற அமர்வில் உடனடியாக இந்த பிரேரணை சபையில் முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இதற்கு ஆதரவளிப்பதற்கு முக்கிய தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அரசாங்கத்திற்குள் அதிருப்தியடைந்துள்ளவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இதன் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி : தமிழன்
அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா பிரேரணை. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியால்  நம்பிக்கையில்லா பிரேரணை. Reviewed by Madawala News on June 15, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.