குவைத் அமைப்பின் நிதியுதவியுடன் அந்நூர் சேரிட்டி நிறுவனத்தினால் வீடு கையளிப்பு.



நூருல் ஹுதா உமர்
குவைத் நாட்டின் அல் நஜாத் அமைப்பின் நிதியுதவியுடன்
 இலங்கை அந்நூர் சேரிட்டி நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்முனைபற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கை அந்நூர் சேரிட்டி நிறுவனத்தின் பிராந்திய இணைப்பாளருமான எம்.ஏ.எம். சியாத்தின் முயற்சியினால் பாலமுனை பிரதேசத்தில் ஏழுபேரை கொண்ட ஒரு குடும்பதிற்காக வீடு ஒன்று முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு அந்த குடும்பத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டது. 


இந் நிகழ்வில் இலங்கை அந்நூர் சேரிட்டி நிறுவனத்தின் தவிசாளர் எஸ்.எம். அலியார் பிரதம அதிதியாக கலந்து  கொண்டதுடன் கௌரவ அதிதியாக மன்முனைபற்று பிரதேச சபை தவிசாளர் டீ.ஆர்.தயானந்தன் கலந்து கொண்டார். மேலும் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லிம், அந்நூர் சேரிட்டி நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ.எம். சலீம், அந்நூர் சேரிட்டி நிறுவனத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள், கிராம நிலதாரி, மற்றும் பள்ளிவாயல்  நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்
குவைத் அமைப்பின் நிதியுதவியுடன் அந்நூர் சேரிட்டி நிறுவனத்தினால் வீடு கையளிப்பு. குவைத் அமைப்பின் நிதியுதவியுடன் அந்நூர் சேரிட்டி நிறுவனத்தினால் வீடு கையளிப்பு. Reviewed by Madawala News on June 23, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.