ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றாக வெளியிட்ட அறிக்கை... விலையேற்றத்தை கம்மன்பில மீது சுமத்தியதையும் கண்டித்தனர்.



எரிபொருள்களின் விலையேற்றத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகள் சில, நாடும் மக்களும் நெருக்கடிக்குள் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், 'பிரபல்யமாகாத தீர்மானங்களை' எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


எரிபொருள் விலையேற்றத்தை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் தோளில் மீது சுமத்துவதைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

-அமைச்சர்களான விமல் வீரவன்சு, வாசுதேவ தாணயக்கார, திஸ்ன வித்தாரண, எம்.பிக்களான அந்துரலிய ரத்த தேரர், ஏளல் எம். அத்தாவுல்லா, முன்னாளி எம். பிலான யூரான் அவனி. ஜி.வீரசிங்க ஸ்ரீ லங்கா கொமிளியூஸ்ஃ கட்சி), அசங்க நவரத் (ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி) ஆகியோர் கையொப்பமிட்டு அறுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்;


உலக நாடுகள் அணைத்தும் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பொதுமக்கள் தங்களுடைய வருமானத்தை இழந்து அல்லது குறைந்த வருமானத்துடல் வாழ்த்து கொண்டிருக்கின்றனர்.


அதேபோல, அரசாங்கத்தின் வருமானமும் ஆகக் கூடுதலாக குறைந்துள்ளது.


அரசாங்கமும் மக்களும் அவ்யாறான நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்து கொண்டிருக்கின்ற நிலையில், பிரபல்யமல்லாத தீர்மாளத்தை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் எந்தவோர் அரசாங்கத்துக்கும் ஏற்படும்.


எரிபொருள்களின் விலைகள் அறிகரிக்கப்பட்ட தீர்மானமும் அவ்வாறானதொரு நீர்மானமாகும் என்பதே எங்களுடைய அவதாளிப்பாகும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள்களின் விலையை அதிகரித்தல், ஜனாதிபதியின் தலைமையில் பிரதமரிஸ் பங்கேற்றலுடன் இடம்பெற்ற அமைச்சரவை ம.ப-குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பதால் அதன் சுமையை விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் தோளின் மீது மட்டுமே சுமத்துவதற்கு எடுக்கப்படும் முடிவை தாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


எவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது என்பது ஜனாதிபதி ஊடகப்பிரியின் ஊடக அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் இராஜினாமா செய்யவேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் விடுத்திருக்கும் அறிவிப்பு, மக்களின் முன்விலையில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி, பிரதமரின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கத்துக்கு புல்லுருவிக இருக்கின்றனரா என, மக்களிடத்தில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே, அந்தப் பொதுச் செயலாளரின் அறிக்கை அமைந்துள்ளது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுயினர் அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அவ்வாறானவர்களின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் பயணத்துக்குத் தடையாக இருக்கும் என்பதால் அச்செயற்பாடுகளை தோல்வியுறச் செய்யவேண்டும். அது ஜனாதிபதி,
பிரதமரின் பொறுப்பாகும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலே
கையொப்பமிட்டுள்ளவர்கள். அமைச்சரும் தேசிய சுதத்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்ய இல்லத்திலேயே ஞாயிற்றுக்கிழமை (13) சந்தித்து இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தனர்.


எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து விடயதானத்துக்குப் 'பொறுப்பான அமைச்சர். உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான சாசுர காரியவசம் எம்.பி. வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பிலும் பங்காளிக் கட்சிகளின் தலைவர் விரிவாகக் கலந்துரையாடியிருந்தனர்,


எரிபொருள் விலையெற்றம், அமைச்சர் கம்மன்பிலவின் தனித் தீர்மானம் அல்ல அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பொதுத் தீர்மானம் ஆகும். ஆகையால் அமைச்சர் கம்மன்பிலவுக்காக குரல்கொடுப்பதற்கு அக்கூடத்தில் பங்கேற்றிருந்த பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர். அதனடிப்படையிலேயே நேற்றைய மாடசு அறிக்கையும்


வெளியிடப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழ்மையான மக்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய நிவாரண பொதியை வழங்குவதற்கும் இக்கட்சித் தலைவர்கள் குறிப்பிடத்தக்கது.
யோசனையொன்றை முன்வைத்திருந்தனர் என்பது


ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றாக வெளியிட்ட அறிக்கை... விலையேற்றத்தை கம்மன்பில மீது சுமத்தியதையும் கண்டித்தனர். ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றாக வெளியிட்ட அறிக்கை... விலையேற்றத்தை கம்மன்பில மீது சுமத்தியதையும் கண்டித்தனர். Reviewed by Madawala News on June 15, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.