முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம், கொடையாளிகளின் உதவியுடன் உலர் உணவு விநியோகம்.


திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் 19 அபாயகரமான தொற்று நோயினால் அதிகூடியளவில்

பாதிக்கப்பட்ட பிரதேசம் மூதூர் பிரதேச சபையில் கீழ் உப பிரிவாக அமைகின்ற தோப்பூர் பிரதேசமாகும். 05 மரணங்கள் அண்மையில் ஏற்பட்டுள்ளன. 


பலர் நோய்த்தொற்றிற்குள்ளாகினர். கிராமங்கள் பல ஒரு மாத்திற்கும் மேலான காலம் முடக்கம் செய்யப்பட்டிருந்தன. முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம், கொடையாளிகளின் உதவியுடன் ரூபா 2500 பெறுமதியான 700 உலர் உணவுப் பொதிகளை இன்று 9ம் திகதி முற்பகல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வினியோகம் செய்தது. 

இவ் உலர் உணவுப் பொதிகள் தோப்பூர் கிராமத்தில் மூதூர் பிரதேச சபையின் அநுசரணையுடன் அண்மையில் அமைக்கப்பட்ட கொவிட் அனர்த்த முகாமைத்துவக் குழுவின் ஊடாக அதிகம் பாதிக்கட்ட கிராமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிராமிய பள்ளிவாசல் நிர்வாகங்களின் மூலமாக, குறிப்பாக இக்பால் நகர், அல்லை நகர் மேற்கு, அல்லை நகர் கிழக்கு ஆகிய மீள்குடியேற்றக் கிராமங்கள் மற்றும் மற்றும் தோப்பூர் நகரத்தில் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.


மேற்படி ஊர்களைச் சேர்ந்த மக்களில் அனேமானோர் அன்றாடம் தொழில்கள் மூலமாக வருமானம் பெறுபவர்களாகும். விவசாயம், மீன்பிடித் தொழில் மற்றும் அவை சார்ந்த கூலித் தொழில்களும் ஈடுபடுபவர்களாகவும் அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்று கூலிச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாகும் காணப்படுகின்றனர். தோப்பூர் நகர்புறம் 155 குடும்பங்கள், அல்லைநகர் மேற்கு 146 குடும்பங்கள், அல்லைநகர் 247 குடும்பங்கள் மற்றும் இக்பால் நகர் 152 குடும்பங்கள் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்டனர்.


மூதூர் பிரதேச சபை உதவித்திட்டமிடல் பணிப்பாளர், முஸ்லிம் எய்ட் சிறிலங்கா ஊழியர்கள், அண்மையில் மூதூர் பிரதேச சபையின் அனுசரணையுடன் ஸ்தாபிக்கப்பட்ட தோப்பூர் அனர்த்த முகாமைத்துவ குழுவின் உறுப்பினர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர் உணவுப் பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவராலும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.  





முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம், கொடையாளிகளின் உதவியுடன் உலர் உணவு விநியோகம். முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம், கொடையாளிகளின் உதவியுடன் உலர் உணவு விநியோகம். Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.