காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த மதுப்பிரியர்கள்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த மதுப்பிரியர்கள்..கடந்த ஒருமாத காலமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த
 நிலையில், இன்று காலை பயணத்தடை தளர்த்தப்பட்டது.

அத்தோடு, மதுபான நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் அறிவித்தது.


எவ்வாறாயினும், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் பயணத்தடை தளர்த்தப்பட்டதும் தொழிலுக்குச் சென்று குடும்பங்களை கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதைக் கடந்து மதுப்பிரியர்கள் காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.


வெயில் படாமல் வீட்டுக்குள் முடங்கி இருந்தவர்கள் எல்லாம் இன்று உழைப்பாளர் தின பேரணியில் பங்கேற்பது போன்று வரிசையில் சென்று மதுபானங்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.


இளைஞர்கள் முதல் வயதானோர் வரை இவ்வாறு காத்திருந்து மதுபானங்களை கொள்வனவு செய்து பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துவரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தியுள்ளனர்.


மதுபான நிலையங்களின் முன்பாக பொலிஸாரரும் கடமையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்ப்ட்டது.


இவ்வாறு இன்றைய தினம் மதுபான நிலையங்களுக்கு முன்னால் ஒன்றுகூடிய ஒரு தரப்பினர் படத்தில் .
- Siva Ramasamy 
காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த மதுப்பிரியர்கள்.. காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த மதுப்பிரியர்கள்.. Reviewed by Madawala News on June 21, 2021 Rating: 5