கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் மீன் இனங்கள் அழியக் கூடியதாகவுள்ளது..



ஹஸ்பர் ஏ ஹலீம்_
எக்ஸ் பிரஸ் பேல் கப்பல் இலங்கை நாட்டு கடற்பரப்புக்குள்
 வருகை தந்து தீப்பற்றி எரிந்தமையால் மீன் இனங்கள் அழியக்கூடியதாகவுள்ளது இதனால் மீனவச் சமூகமும் பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள் என திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர் ஏ.ஆர்.பாயிஸ் தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்று (09)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்

எமது நாட்டிலுள்ள விலை மதிக்க முடியாத மீனினம் ,ஆமை, டொல்பின்கள் இதன் விளைவாக செத்துக் கொண்டிருக்கிறது என்பதை சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரசாயணப் பொருட்களை மீன் உட்கொள்ளும் போது அதனை மீனவர் பிடித்து விற்கின்ற போது
பொது மக்களுக்கு புற்று நோய் ஏற்படும்

இதனால் எமது மீனவர்கள் அச்சம் கொண்டுள்ளார்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார்கள் வெள்ளம் புயல் டெங்கு கொரோனா போன்றவற்றால்.மீன்களுக்கான
சரியான விலை கிடைப்பதில்லை

ஹிக்கடுவை முதலான பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்படவுள்ளதோ அது போன்று
திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும்

X - Pres கப்பலில் உள்ள இரசாயணம் அகற்றப்படும் வரைக்கும் மீனவர்க ளுக்கு வாழ்வாதார நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்று கூறியும் ஒன்றும் நடக்கவில்லை

வடக்கில் மீனவர்களுவர்களுக்கு கொடுக்கின்ற அக்கறை கிழக்கு மாகாண மீனவர்களுக்டும் கொடுக்க வேண்டும் என்றார்
கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் மீன் இனங்கள் அழியக் கூடியதாகவுள்ளது.. கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் மீன் இனங்கள் அழியக் கூடியதாகவுள்ளது.. Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.