கர்ப்பிணி தாய்மார்களும் பயமில்லாமல் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்.



கர்ப்பிணி தாய்மார்களும் பயமில்லாமல் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்_குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத்

ஹஸ்பர் ஏ ஹலீம்_

கொவிட்19 தடுப்பூசி சைனோபாம் முதலாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்ற நிலையில் இன்றும்(15) ஐந்தாவது நாளாக குறிஞ்சாக் கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் ஏற்றப்பட்டு வருகிறது.

குறித்த தடுப்பூசி ஏற்றும் பணி குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத் தலைமையில் இடம் பெற்று வருகின்றது. 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு முதற்கட்டமாக இத் தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஏற்றப்பட்டு வருகிறது.
இதன் போது ஊடகங்களுக்கு கொவிட்19 தடுப்பூசி தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத்
கொரோனா தடுப்பூசி ஏற்றலில் முதலாவது நாள் மக்களின் வருகை குறைவாக இருந்தது அதனை தொடர்ந்து சமூக விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதில் இரூந்து இது தொடர்பில் மக்கள் ஆர்வமாக உள்ளார்கள் தங்களது பகுதிக்கு 730 டோஸ்கள் வழங்கப்பட்டது இற்றை வரைக்கும் 694 டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.இது வரைக்கும் தடுப்பூசி பெற்றவர்கள் எந்தவித முறைப்பாடுகளையோ அல்லது பாதகமான விளைவுகள் தொடர்பிலோ எதுவும் முன்வைக்கவில்லை.எதிர் வரும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களும் இதனை அச்சமில்லாமல் பெற்றுக் கொள்ளவும் இதய நோய்,நீரிழிவு,சர்க்கரை வியாதி எதுவாக இருப்பினும் இத் தடுப்பூசி நடவடிக்கை அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மக்கள் அச்சமின்றி இதனை பெற்று கொவிட்19 நோயில் இருந்து விடுபட முடியும் என்றார்
கர்ப்பிணி தாய்மார்களும் பயமில்லாமல் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம். கர்ப்பிணி தாய்மார்களும் பயமில்லாமல் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம். Reviewed by Madawala News on June 15, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.