முகக்கவசத்தை சரியாக அணியுமாறு கூறிய சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல். - Madawala News Number 1 Tamil website from Srilanka

முகக்கவசத்தை சரியாக அணியுமாறு கூறிய சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்.கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய
 சம்பவமொன்று வவுனியா சாந்தசோலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சுகாதார பரிசோதகர் நேற்று (09) மாலை சாந்தசோலைப் பகுதிக்கு கடமை நிமித்தம் சென்றிருந்தார்.

இதன்போது முகக்கவசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியில் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது அதனை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவித்து சுகாதார பரிசோதகர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்வத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முகக்கவசத்தை சரியாக அணியுமாறு கூறிய சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல். முகக்கவசத்தை சரியாக அணியுமாறு கூறிய சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல். Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5