எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள தென்னை, கித்துள், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ, மக்களின் தரப்பில் இருந்தே பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் செயற்பட்டுள்ளார் என்றார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது. எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக மீன்பிடி கைத்தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என்றும் தெரிவித்த அவர், ஆகவே, விலையேற்றம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். இவ்விடயம் குறித்த ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளோம் என்றார். “எரிபொருள் விலையேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கை குறித்து மாறுப்பட்ட பல கருத்துகள் குறிப்பிடப்படுகின்றன. எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை அறிந்தே அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதனை அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடு எனக் கருத முடியாது. கருத்துச் சுதந்திரம் அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது” என்றார். “பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோரின் மாறுப்பட்ட கருத்துகள் அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றார்.
எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதை  ஏற்றுக்கொள்ள முடியாது. Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5