எரிபொருள் விலை அதிகரிப்பினால் நாட்டு மக்கள் கடும் அதிருப்தி.. அரசாங்கத்தை திட்ட ஆரம்பித்துள்ளனர்.



நா.தினுஷா
எரிபொருள் விலை அதிகரிப்பி னால் நாட்டு மக்கள்
 அரசாங்கத்தை திட்ட ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமுகமளிக்காத காரணத்தினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச் சரவைக் கூட்டம் நடந்தது.


இதன்போது கருத்துவெளியிட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.


எரிபொருள் விலை சடுதியாக அந்தளவு அதிகரித்திருப்பது நல்லதல்லவென குறிப்பிட்டுள்ள அமைச்சர் சமல், உரங்களின் தட்டுப்பாடும் அரசு மீது மக்களை அதிருப்தி கொள்ள செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளாத காரணத்தினால் இந்த விடயங்களை அவர் தலைமையிலான மற்றுமொரு கூட்டத்தில் ஆராய்வதென இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

Thamizhan -
எரிபொருள் விலை அதிகரிப்பினால் நாட்டு மக்கள் கடும் அதிருப்தி.. அரசாங்கத்தை திட்ட ஆரம்பித்துள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பினால் நாட்டு மக்கள் கடும் அதிருப்தி.. அரசாங்கத்தை திட்ட ஆரம்பித்துள்ளனர். Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.