இன்று சர்தேச வீட்டு வேலைத்தொழிலாளர் தினம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

இன்று சர்தேச வீட்டு வேலைத்தொழிலாளர் தினம்.


-  ஜே.எம்.ஹபீஸ் -

வீட்டு  வேலைத்  தொழில் துறையை  உடனடியாக சம்பள நிர்ணய சட்டத்திற்குள் கொண்டு வருமாறு 

வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்தி சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


 


இன்று இடம் பெறும்(16) சர்வதேச வீட்டு வேலைத்தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கண்டியைத் தளமாகக் கொண்டு இயங்கும் 


மேற்படி அமைப்பு இவ்வேண்டு கோளை விடுத்துள்ளது. அச்சங்கம்  இது பற்றி மேலும்’ தெரிவித்துள்ளதாவது-


 


 ‘வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம்’ என்ற ஒரு குடையின் கீழ் உள்நாட்டில் வேலை செய்யும் வீட்டு வேலைத்தொழிலாளர்கள் இன்று அணி திரட்டப்பட்டுள்ளனர். கடந்த 15 வருடங்களாக நாங்களும் தொழிலாளர்களாகவே உள்ளோம், எங்களுடைய தொழிலும் இந்த நாட்டில் ஒரு முக்கியமான  தொழிலாகும் எனக் குறிப்பிடும் அவர்கள்  தமக்கும் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை  அவ்வப் போது ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களிடம்  முன்வைத்தும்  வலியுறுத்தியும் வந்துள்ளனர்.  


 


இன்று கொரோனா தொற்று காரணமாக உள் நாட்டில் பல இடங்களிலும்  வேலை ​செய்யும் வீட்டு  வேலைத் தொழிலாளர்களின்  85 சதவீதமானோர் தங்கள் தொழிலை இழந்து  நிர்கதிக்கு உள்ளாகியுள்ளனர். வீட்டு  வேலைத் தொழிலாளர்களுக்கான  சம்பள நிர்ணய  சட்டம் உரிய நேரத்தில் கொண்டு வரப்பட்டிருந்தால்,  இன்று  இத்தொழிலுக்கு  இப்படியான  ஒரு பாரிய  பாதிப்பு ஏற்பட்டிருக்காது.


எனவே சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர் தினமான  இன்று உடனடியாக வீட்டு வேலைத் தொழிலை, சம்பள நிர்ணய சட்டத்திற்குள்  கொண்டு வருமாறு அரசிடம் ஒரு  கோரிக்கையை    “வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம்”  முன்வைக்கின்றது .


வீட்டு  வேலைத் தொழிலாளர்களும், தொழிலாளர் படையின் ஒரு பிரிவினரேயாகும் என அவ் அறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இன்று சர்தேச வீட்டு வேலைத்தொழிலாளர் தினம். இன்று சர்தேச வீட்டு வேலைத்தொழிலாளர் தினம். Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5