இலங்கையில், பிரித்தானியாவின் B.1.1.7 வைரஸ் மற்றும் இந்தியாவின் டெல்டா கொரோனா வைரஸ் என்பவற்றுடன் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

இலங்கையில், பிரித்தானியாவின் B.1.1.7 வைரஸ் மற்றும் இந்தியாவின் டெல்டா கொரோனா வைரஸ் என்பவற்றுடன் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.இந்தியாவில் பரவிவரும் B.1.617.2 டெல்டா என்ற கொரோனா
வைரஸ் திரிபுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து நபரொருவருக்கே இவ்வாறு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தற்போது நாட்டின் சில பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களிடையே பிரித்தானியாவின் கென்ட் (Kent) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.1.7 வகை வைரஸ் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வைரஸை கொண்டவர்கள் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டி, வாரியபொல, மாத்தறை-ஹபராதுவ, திஸ்ஸமஹாராம, கராபிட்டி மற்றும் றாகம ஆகிய பகுதிகளில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Siva Ramasamy 
இலங்கையில், பிரித்தானியாவின் B.1.1.7 வைரஸ் மற்றும் இந்தியாவின் டெல்டா கொரோனா வைரஸ் என்பவற்றுடன் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில், பிரித்தானியாவின் B.1.1.7 வைரஸ் மற்றும் இந்தியாவின் டெல்டா கொரோனா வைரஸ் என்பவற்றுடன் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5