சொகுசு குடியிருப்பு வளாகத்தில் களியாட்டம்... 9 பேர் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

சொகுசு குடியிருப்பு வளாகத்தில் களியாட்டம்... 9 பேர் கைது.


கொழும்பு - கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள கிரெஸ்கட் மோனார்க் (Crescat Monarch) சொகுசு குடியிருப்பு

வளாகத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியமைக்காக நேற்று இரவு இரண்டு வெளிநாட்டவர் உட்பட 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இந்த வளாகத்தின் கூரையின் உச்சியில் உள்ள நீச்சல் குளம் அருகே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்து நடத்தப்பட்டுள்ளது. 


விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.


கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சொகுசு குடியிருப்பு வளாகத்தில் களியாட்டம்... 9 பேர் கைது. சொகுசு குடியிருப்பு வளாகத்தில் களியாட்டம்...  9 பேர் கைது. Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5