சிறுநீரக நோயால், புற்றுநோயால் தினசரி நாட்டில் 100 பேர் மரணமடைகின்றனர்.



யோ.தர்மராஜ்
நாட்டில் ஒரு நாளில் புற்றுநோயால் 54 பேரும் சிறுநீரக
 நோயால் 46 பேரும் மரணிப்பதாகவும் வருடத்தில் சராசரியாக ஒரு இலட்சத்து 64 ஆயிரம் பேர் சிறுநீரக நோய்க்குள்ளாவதுடன், 74 ஆயிரம் பேர் புற்று நோய்க்குள்ளாவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.



சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளு மன்றத்தின் சபை ஒத்திவைப்பு விவாதத்தில்
கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகை
யில்,


கொரோனா தொற்று தொடர்பாக நான் பல முறை நாடாளுமன்றத்தில் பதிலளித்துள் ளேன்.

எனினும், தற்போது எதிர்க்கட்சியில் கொண்டுவந்த யோசனையானது, 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், விவசாயப் பொருட்களை பகிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கானதல்ல. மாறாக, இரசாயன உர இறக்குமதியை நிறுத்தி,
சேதனப் பசளை உற்பத்தியை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் யோசனையை தடுப்பதற்கே எதிர்க்கட்சியினால் கொரோனா தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று நிலைமை குறித்து எதிர்க்கட்சியினர் முதலைக்கண்ணீர் வடிக்கின் றனர்.


ஆனால், தற்போது கிடைக்கும் தகவல் களுக்கமைய ஒரு வருடத்திற்கு 30 ஆயிரத்தால் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிக் கின்றனர்.

சிறுநீரக நோயினால் நாளொன்றுக்கு 46 பேர் உயிரிழக்கின்றனர்.

நன்றி - Thamilan
சிறுநீரக நோயால், புற்றுநோயால் தினசரி நாட்டில் 100 பேர் மரணமடைகின்றனர். சிறுநீரக நோயால், புற்றுநோயால் தினசரி நாட்டில் 100 பேர் மரணமடைகின்றனர். Reviewed by Madawala News on June 09, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.