இந்தியாவிடமிருந்து 100 மில்லியன் டொலர் நிதியுதவி. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இந்தியாவிடமிருந்து 100 மில்லியன் டொலர் நிதியுதவி.சுபீட்சத்தின் நோக்கு“கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கான பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரச நிறுவனங்களில் மின்சாரத்துக்காக செலவாகும் அதிக தொகையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

முதற்கட்டமாக, பாராளுமன்றத்துக்குத் தேவையான மின்சாரம், தியவன்னா ஓயாவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்துக்காக, இந்திய அரசாங்கமானது இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் ஊடாக, 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை (Line of Credit) வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இதற்கான இரு தரப்பு கடன் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த கடன் ஒப்பந்தம், இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஜனாதிபதி முன்னிலையில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆடிகலவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது
இந்தியாவிடமிருந்து 100 மில்லியன் டொலர் நிதியுதவி. இந்தியாவிடமிருந்து 100 மில்லியன் டொலர் நிதியுதவி. Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5