அநியாய தடைக்கு எதிராக சட்ட ரீதியில் நீதிமன்றத்தை நாடுவோம் : SLTJ



குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இனங்க இலங்கையில் 11
அமைப்புகளை தடைசெய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 06 தவ்ஹீத் அமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் ஏகத்துவ பிரச்சாரம் மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுத்து நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டு ஜனநாயக ரீதியில் செயல்படும் அமைப்பாகும்.

தீவிரவாத, பயங்கரவாத சிந்தனைகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பகிரங்கமாக செயல்படுவதுடன், தற்கொலை தாக்குதலின் முக்கிய குற்றவாளி ஸஹ்ரான் ஹாஷிம் குறித்த முக்கிய தகவல் உட்பட பல்வேறு விடயங்களில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கி நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து அக்கறையுடன் செயல்பட்ட ஓர் அமைப்பாகும்.

இவ்வாறான நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து அக்கறையுடனும் தீவிரவாதத்திற்கு எதிராக 100 வீதம் ஜனநாயக விழுமியங்களை கடைபிடித்து இயங்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உட்பட தவ்ஹீத் அமைப்புகளை தடை செய்ய எத்தனிப்பது ஜனநாயக விழுமியங்களை மீறும் செயலாகும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்த வரையில் ஜனநாயக வழியில் சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏகத்துவ பிரச்சாரம் மற்றும் சமூக பணிகளை முன்னெடுக்கும் அமைப்பு என்கின்ற அடிப்படையில் சட்ட ரீதியில் ஜனநாயக வழிமுறைகளை கையாண்டு நீதியை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும்.
இன்ஷா அல்லாஹ் சட்டத்தின் முன்னால் அநீதி தோற்று நீதி வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன் அவனே சிறந்த பொறுப்பாளன்.
அல் குர்ஆன் 3:173

இப்படிக்கு

S.K முஹம்மது ஷிஹான்
செயலாளர்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
அநியாய தடைக்கு எதிராக சட்ட ரீதியில் நீதிமன்றத்தை நாடுவோம் : SLTJ அநியாய தடைக்கு எதிராக சட்ட ரீதியில் நீதிமன்றத்தை நாடுவோம் : SLTJ Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.