அக்குறணையில் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த மன்சூர் JP அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.



அக்குறணையில் மூத்த அரசியல் தலைமையாக நீண்ட காலம்
மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த மன்சூர் JP அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.



அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ மன்சூர் JP அவர்களின் மரணச் செய்தி நேற்றைய தினம் இரவு என் செவிகளுக்கு எட்டியபோது மிகவும் கவலையடைந்தேன்.
கண்டி மாவட்டத்தில் மிளிந்து தேசிய அரசியலில் பிரதான் பாத்திரம் வகித்த மர்ஹூம் ஏ.சி.எஸ்.ஹமீட் அவர்களுடன் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்தான் மர்ஹூம் மன்சூர் JP. எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு சிறந்த அரசியல்வாதி அவர்.



என்னுடன் மிகவும் நெருங்கி அரசியல் செய்த ஒரு சிறந்த மாமனிதர். 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது பிரதேச சபை தேர்தலின்போது, அக்குறணை பிரதேச சபை தேர்தலில் போட்டி இட்டு தெரிவான இவர் அன்று முதல் மரணிக்கும் வரை அக்குறணை பிரதேச சபையின் உறுப்பினர் 30 வருடங்களாக பிரதிநிதித்துவ அரசியலில் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார்.


யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வாழ்ந்த சிறந்த ஒரு அரசியல்வாதி, மாத்திரம் அன்றி சகலருடனும் சகஜமாக நெருங்கிப் பழகும் மனமான்மை கொண்டவர்.



2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் அக்குறணை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களை இழந்து உள்ளது என்பது மிகவும் வேதனை தருகிறது. இந்நிலையில் மர்ஹூம் மன்சூர் JP அவர்களின் மறைவை கேள்விப்பட்டு மிகவும் நொந்துபோனேன். அகிலத்தை படைத்து பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ் அன்னாரின் தவறுகளை மன்னித்து, நற்கருமங்களை ஏற்றுக்கொண்டு, ஜன்னதுல் பிர்தெள் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்குவானாக என பிராத்திற்கிறேன்.



அத்துடன், மர்ஹூம் மன்சூரின் மறைவினால் துயரத்தில் ஆழ்ந்து இருக்கும் அவரின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தைரியத்தையும் மன ஆறுதலும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன்.

எம்.எச்.அப்துல் ஹலீம்,
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்,
கண்டி மாவட்டம்.
அக்குறணையில் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த மன்சூர் JP அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அக்குறணையில் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த மன்சூர் JP அவர்களின் மறைவு பேரிழப்பாகும். Reviewed by Madawala News on April 06, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.