ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.. சற்றுமுன் சபாநாயகர் அறிவிப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.. சற்றுமுன் சபாநாயகர் அறிவிப்பு.ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
 பறிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் இந்த அறிவிப்பினை சற்று முன்னர் வெளியிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் பதவி வெற்றியமாக உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 இதனை  நிரப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

விருப்பு வாக்குப் பட்டியலில் அவருக்கு அடுத்தப்படியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவே இருக்கின்றார்.

ஆகையால், ரஞ்சனின் வெற்றிடத்துக்கு அஜித் மன்னப்பெருமவே நியமிக்கப்படுவார் என​ தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.. சற்றுமுன் சபாநாயகர் அறிவிப்பு. ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.. சற்றுமுன் சபாநாயகர் அறிவிப்பு. Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5