இலங்கையில் கொரோனா தொற்று பாரியளவில் குறைவடைவு.. உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது.



 இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் தொற்றின் நோய் பரவல் 17.07 வீதம் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார

நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


தொடர்ந்தும் பேசிய அவர், கோவிட் -19 தொற்றாளர்களின்   எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது.


தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் 11 நாடுகள் குறித்த அறிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை நோய் பரவல் குறைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 132 கர்ப்பிணி தாய்மார்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை.


அத்தோடு ஒரு வயதிற்கு குறைந்த இரு குழந்தைகள் இதுவரையில் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகத்தின் தாய்மார் மற்றும் குழந்தைகள் சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், கோவிட் தொற்றுக்குள்ளான எந்தவொரு கர்ப்பிணி தாய்மாரும் உயிரிழக்கவில்லை. சகலருக்கும் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு அவர்கள் பூரண குணமடைந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று பாரியளவில் குறைவடைவு.. உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது. இலங்கையில் கொரோனா தொற்று  பாரியளவில் குறைவடைவு..   உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது. Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.