புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

 


குளியாப்பிட்டியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட

இந்திய பிரஜை உயிரிழந்தது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.


இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்திய பிரஜையின் உயிரிழப்பு காரணமாக பல முக்கிய விபரங்கள் வெளியில்; தெரியவராமல் போகலாம் என தெரிவித்துள்ளார்.


இந்திய பிரஜையின் உயிரிழப்பு குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


குளியாப்பிட்டியில் புத்தரின் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர் சுவாசப்பிரச்சினைகளை எதிர்கொண்டதால் வாரியபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


குளியாப்பிட்டியில் பல சிலைகளை சேதப்பபடுத்திய குற்றச்சாட்டின் கீழ் 19ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார்.

புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.  விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.