PHOTOS : மேல் மாகாண கதீப்மாா்களுக்கு தெஹிவளை ஜூம்ஆப் பள்ளிவாசலில் முழு நாள் கருத்தரங்கு.



 (அஷ்ரப் ஏ சமத்)

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் தெஹிவளை ஜம்ஆப் பள்ளிவாசலும் இணைந்து

   மேல் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ள பிரதான ஜூம்ஆப் பள்ளிவாசல்களது பிரதான  கதிப்மாா்கள் (மௌலவிமாா்கள) கடந்த ஞயிற்றுக்கிழமை(04.04.2021) தெஹிவளை  முகையிதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் வைத்து முழு நாள் கருத்தரங்கொன்று நடைபெற்றது.

PHOTOS : https://www.facebook.com/MadawalaNewsWeb/posts/3943575902395379

இந் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலகள் திணைக்களத்தின் பணிப்பாளா் அஷ்ஷேக் ஏ.பி.ஏ அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது. அத்துடன்  பேராசிரியா்  ருஸ்தி பாபு,  அப்துல் ஹமீட் பாஜி, பள்ளிவாசல்கள் பொறுப்பான வக்பு சபையின் தலைவா் சிரேஸ்ட சட்டத்தரணி  சப்ரி ஹலீம்டீன்,  ஜம்மியத்துல் உலமா பதில் தலைவா் அஷ்ஷேக் அப்துல் ஹாலிக், முஸ்லிம் சமய திணைக்களத்தின் நீதி அலுவலகா், சட்டத்தரணி  எம். சுரைஹா , பிரதம மந்திரியின் முஸ்லிம் சமய விவகார ஓருங்கிணைப்பாளா்  அஷ்ஷேக் ஹசன் மௌலானா,  சப்பரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மருதானை மாளிகாகந்தை பிரதான ஆமதுருமான பேராசிரியா் கும்புருகமுவ வஜிர தேரோவும் கலந்து கொண்டு  அங்கு வருகை தந்திருந்த 50க்கும் மேற்பட்ட கதிப்மாா்களுக்கு விரிவுரைகளையும்  ஆற்றினாா்கள்.


இங்கு உரையாற்றிய சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தா் கும்புருகமுவ வஜிர தேரா் உரையாற்றுகையில் - 

இந்த நாடு பெரும்பான்மையான பௌத்தா்கள் வாழ்ந்தாலும் ஏனைய  ஹிந்து , கிரிஸ்த்துவம் இஸ்லம் மதங்களைக் கொண்ட சகல சமுகங்களும் அழகாக அனுஸ்சரித்து போகக் கூடியதொரு பல்லிண சமுகம் வாழ்கின்றதொரு  நாடாகும்,  இந் நாட்டில் மூவினங்களும் அமைதியாகவும் சமாதானமாகவும்  அவா்ரவா்களது மத கலை கலாச்சார விழுமியங்களுக்கு மதிப்பளித்து தமது கடமைகளை எவ்வித அச்சமின்றி வாழ்ந்து வந்தனா்  . ஆனால் கடந்த 2 வருடத்தின் முன் இதே ஒரு தினத்தில்  உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் சஹ்ரானின் குண்டுத்தாக்குதலால்  முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கருப்பு புள்ளியை வைத்துவிட்டுச் சென்றுள்ளாா்  இதனால்  தான்  நாம் நமது சகோதரா்களை சந்தேகக் கண்கொண்டு பாா்க்கவேண்டிய நிலைஏற்பட்டுள்ளது..


 நாம் கிரிஸ்த்துவ இலங்கைத் தலைவா் மல்கம் காடினா் ரன்ஜித் ஆண்டகை தீா்க்கசரிமான முடிவினால் இந்த நாட்டில்  பாரிய அசம்பவாதிங்கள் நடைபெறவிலலை.  


நாம்  இலங்கையில் இன்றும் அமைதியாக வாழ்கின்றோம். ஆகவேதான் பள்ளிவாசல்களில் உள்ள  பிரதான மௌலவிமாா்கள் இணைந்து  முஸ்லிம் சமுகத்தில்  உள்ள இளைஞா் சமுதாயத்தினை நல்வழிக்கு கொண்டு வருதல் வேண்டும்.  கடும்போக்குடைய இஸ்லாமிய கொள்கைகளை விட்டு தற்போதைய இளைஞா்களை சீரான சிறந்தவா்களாக    கொண்டுவருதல் வேண்டும்.  முஹம்மத் நபி (ஸல்) அவா்களின் சீறிய  வாழ்க்கை முறை அழகானது அவரின் போதனைகள் சிறந்தது.. அவா் விட்டுக்கொடுப்பு, பொறுமை, இறக்கம் சாந்தி சமதானமாக  இஸ்லாம் மதத்தினை உங்களுக்கு போதித்தவா் . 


கடந்த காலங்களில் மருதானை மாளிகாகந்தை எனது பண்சலையில் முஸ்லிம்களுக்கு நோன்பு திறப்பதற்கு  வசதியளித்தேன். அதேபோன்று மறைந்த எம்.எச். முஹம்மத் அவா்களினால் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் பிரதான ஆமதுருமாா்களை அழைத்து  காலையுணவினை வழங்கி வைத்தாா். பௌத்தம் - இஸ்லாம் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்த நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்றுள்ளோம். இன்றும்  மௌலவி ஹசன் மௌலானவுடன் இணைந்து எனது 90 வயதிலும் எனது கடமையைச் செய்து வருகின்றேன். 


ஆகவேதான் முஸ்லிம் சமய திணைக்களம் இதுபோன்ற நல்லினக்க கருத்தரங்குகளை நாடு பூராவும் செயல்படுத்தி முஸ்லிம்களில் சிலா்  கடும்போக்குவாத மதக் கொள்கையை கைவிட்டு இந்த அழகான நாட்டில் சகலரும் சகோதரத்துவதோடு ஜக்கியமாகவும்  சாந்தி சமாதானமாக வாழ்வேமாக என பேராசிரியா்   கும்புருகமுவ தேரா் அங்கு  குழுமியிருந்த மௌலாவிமாா்கள் மத்தியில்  உரையாற்றினாா்.

PHOTOS : மேல் மாகாண கதீப்மாா்களுக்கு தெஹிவளை ஜூம்ஆப் பள்ளிவாசலில் முழு நாள் கருத்தரங்கு. PHOTOS : மேல் மாகாண கதீப்மாா்களுக்கு  தெஹிவளை   ஜூம்ஆப் பள்ளிவாசலில்  முழு நாள் கருத்தரங்கு. Reviewed by Madawala News on April 06, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.