பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் சிந்தனையாளர் விவேக் காலமானார்.



பிரபல நகைச்சுவையாளர் விவேக் இன்று காலமானார்.

திடீர் மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம்(16) மயக்கமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவேக் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

நீ இறக்கும்போது அவருக்கு வயது 59.

மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 11 மணியளவில் சுய நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

கொண்டுவரும்போது அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இதயத்திற்குச் செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100% அடைப்பு இருந்தது. அதைக் கண்டுபிடித்து சிகிச்சை செய்தோம். எக்மோ செய்தபிறகுதான் இதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது.

எவ்வாறாயினும் பாதிப்பு தீவிரமாக இருந்ததன் காரணமாக அவருக்கு உயிரிழக்க நேர்ந்துள்ளது. பலவிதமான சிகிச்சை அளித்தும் இதயம் பலவீனமாக இருந்ததால் முயற்சிகளுக்குப் பலன் இல்லை.

இந்த உடல்நலப் பிரச்னை ஒரே நாளில் வராது. அவர் இரத்தக் கொதிப்புக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்துள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையும் சிம்ஸ் மருத்துவமனை துணை தலைவர் சுட்டிக்காட்டினார்.
பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் சிந்தனையாளர் விவேக் காலமானார். பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் சிந்தனையாளர்  விவேக் காலமானார். Reviewed by Madawala News on April 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.