வெளிநாட்டிலிருந்து வருகை தருவோர்களுக்கு மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்



வெளிநாட்டிலிருந்து வருகை  தருவோர்களுக்கு மேலும் புதிய கட்டுப்பாடு களை விதிக்க தீர்மானித் துள்ளதாகத் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.


வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளில் அதிகமானோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வருகை  தருவோர்களுக்கு மேலும் புதிய கட்டுப்பாடு களை விதிக்க தீர்மானித்துள்ளதாக சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு 52 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற் றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.


அதில் 1593 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத் தப் பட்டிருந்த போது கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.


அத்துடன்,  வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களில் அதிகமானோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 3480 பேர் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதில் 538 பேர் வெளிநாட்டி லிருந்து வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையை கருத்திற்கொண்டு வெளிநாட்டிலிருந்து வருகை தரு வோர்களுக்கு  மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டிலிருந்து வருகை தருவோர்களுக்கு மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோர்களுக்கு மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க  தீர்மானம் Reviewed by Madawala News on April 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.