நாட்டிற்கு இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்களில் சிறு அளவிளேனும் நச்சு இரசாயனம் கிடையாது.



 நாட்டிற்கு இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்களில் சிறு அளவிளேனும் நச்சு இரசாயனம் கிடையாது

என்பதை சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டுப்பிரிவு உறுதியாகத் தெரிவிக்கின்றது.


அது தொடர்பில் சில தரப்பினர் மேற்கொள்ளும் விமர்சனங்களை நிராகரிப்பதாக மேற்படி பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டுக்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் அதற்கு உரிய பரிசோதனைகள்மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் மீன்கள் தொடர்பில் ஆசனிக் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் அதற்கு உரியவிஷேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் நச்சு இரசாயனம் உள்ளடக்கப்பட்டுள்ளது என வெளிவரும் செய்திகளை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


எவ்வாறெனினும் உணவுப் பொருட்கள் சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் அவற்றை களஞ்சியப்படுத்தும் போதும் போக்குவரத்து செய்யும் போதும் முறையான நடைமுறைகள் பின்பற்றப் படாவிட்டால் எப்லடொக்சின் எனும் புற்றுநோய் இரசாயனம் அந்த உணவுப் பொருட்களில் உருவாகலாம் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அதே வேளை; இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சித்திகா சேனாரட்ன கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவுப்பொருட்கள் சிலவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

நாட்டிற்கு இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்களில் சிறு அளவிளேனும் நச்சு இரசாயனம் கிடையாது. நாட்டிற்கு இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்களில் சிறு அளவிளேனும் நச்சு இரசாயனம் கிடையாது. Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.