யாரை ஆட்சி பீடம் ஏற்றுவது? ஏமாறும் மக்கள் திண்டாட்டம்.



ஹஸ்பர் ஏ ஹலீம்_
இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற 
கட்சிகளிலும், ஆட்சியாளர்களிலும், மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார். 

இன்று (17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது

அண்மைய காலங்களில் இலங்கையை ஆட்சி செய்யும் அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதும் விமர்சனங்கள் செய்து வருவதும் பொதுமக்களிடையே ஒருவகை அச்சத்தையும் வெறுப்புணர்வையும் ஏற் படுத்திக் கொண்டிருக்கின்றது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி, சீனி இறக்குமதி மோசடி, வெளிநாடுகளுக்கு காணிகளை விற்பனை செய்தல், தேங்காய் எண்ணெய் இறக்குமதி, உர இறக்குமதி, அதிக கடன், பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, பண வீண்விரயம், காடழிப்பு, அண்மைய கைதுகள், ஊழல் மோசடி, சிறுபான்மையினர் மீதான அழுத்தங்கள் என ஒவ்வொரு தலைப்புகளிலும் இவர்களுக்கிடையே நடைபெறுகின்ற வாதப்பிரதி வாதங்கள், கேள்விகள், பத்திரிகை செய்திகள் எல்லாவற்றையும் அவதாணிக்கின்ற போது ஏன் இவர்களுக்கு வாக்களித்து ஆட்சிபீடமேற்ற வேண்டும் என்றும் நாட்டின் தேசிய வருமானம், பொருளாதாரம் என்பவற்றை அழிக்க வேண்டும் என்றும் கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கின்றது. 

எனவே இந்நாட்டு மக்கள் சிறந்த பொருளாதாரக் கொள்கை, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தல் ,கடன் சுமைகளை குறைத்தல், ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்தல் போன்ற நல்ல வேலைத் திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி போன்ற மூன்றாவது சக்தி ஒன்றை பலப்படுத்தி அவர்களிடம் இந்த நாட்டின் ஆட்சியை ஒப்படைப்பதன் மூலம் இந் நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தி செய்வதாயின் பெரும்பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும், விஷேடமாக சிறுபான்மை கட்சிகளும் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாரை ஆட்சி பீடம் ஏற்றுவது? ஏமாறும் மக்கள் திண்டாட்டம். யாரை ஆட்சி பீடம் ஏற்றுவது? ஏமாறும் மக்கள் திண்டாட்டம். Reviewed by Madawala News on April 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.