பெண் இனத்தை இழிவாக பேசியதாக ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.



பெண் இனத்தை இழிவாக பேசிய ஜீவன் தொண்டமான் பகிரங்க
 மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி ஹட்டன் நகரில் நாளை (18) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் மல்லியப் பூ சந்தியில் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொட்டகலை சி.எல்.எப் இல் இடம்பெற்ற கூட்டமொன்றில் மலையக பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியமையை கண்டித்து பெண்கள் அமைப்புகளும் ஊடகங்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், பெண்களை தகாத வார்த்தையில் பேசிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மலையக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி குறித்த எதிர்ப்பு ஆர்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Siva Ramasamy 
பெண் இனத்தை இழிவாக பேசியதாக ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். பெண் இனத்தை இழிவாக பேசியதாக ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on April 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.