விகாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

விகாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு கைது.திருகோணமலை-கந்தளாய் பகுதியில் விகாரைக்குச் சென்ற
 இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்கேத நபரை இன்று கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தம்பலகாமம் 96 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விகாராதிபதி ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் 96 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள அக்ரபோதி விகாரைக்குச் சென்ற 12 மற்றும் 14 வயதுச் சிறுவர்கள் பூஜை வழிபாட்டுக்காகச் சென்ற போது பௌத்த பிக்கு தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தமது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய நேற்றிரவு (6) குறித்த பிக்குவை கைது செய்ததாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Siva Ramasamy
Thamilan lk

விகாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு கைது. விகாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு கைது. Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5