இரத்தினக்கல் அகழ்வுக்காக ஆறுகள் ஏல விற்பனை.



 இரத்தினக்கல்  அகழ்வுக்காக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஆறுகள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக

இரத்தினக்கல் அதிகார சபை தலைவர் திலக் வீரசிசங்க நேற்று தெரிவித்தார்.


களுகங்கை வேகங்கை ஹங்கமுவ கங்கை ஆகிய ஆறுகள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இத்திட்டத்திற்கிணங்க வேகங்கை நிவித்திகல டேல பாலம் முதல் எரபத்த வரையிலான சுமார் 50முதல்  மீற்றர் நீளமான 53துண்டுகள் புத்தாண்டின் பின்னர் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தகவல் தருகையில் இரத்தினபுரி மாவட்ட இணைப்பு குழு கூட்டம் நிவித்திகல பிரதேச இணைப்பு குழு கூட்டம் ஆகியவற்றின் தீர்மானத்திற்கிணங்க  ஏல விற்பனை வெளிப்படை தன்மையுடையதாகவும் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அனுமதியோடு நடைமுறைப்படுத்தப்படும். இதேவேளை மேற்படி இடங்களில் இரத்தினக்கல் அகழ்வு இடம் பெறுவதால் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படுகின்றது. இப்பிரதேச தனியார் காணிகளில் பரவலாக சட்ட விரோத இரத்தினக்கல் அகழ்வு இடம்பெற்று வருவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை களுகங்கை வேகங்ளை ஆகிய ஆறுகளின் சில பகுதிகள் தற்போது ஏலவிற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினக்கல் அகழ்வுக்காக ஆறுகள் ஏல விற்பனை. இரத்தினக்கல்  அகழ்வுக்காக ஆறுகள் ஏல விற்பனை. Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.