இரு நாடு இரு சட்டத்தை சமர்ப்பித்துள்ளனர்.இது தான் இவர்களின் விழுமியம்.



இன்று(06) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற

உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்த பிரதான விடயங்கள்.


கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் ஆரம்ப 2010-2015 காலப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 50 ஏக்கர் நிலப்பரப்பை சீனாவிற்கு முழு உரித்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் வழங்கப்பட்டத்தை நாங்கள் 2015 ஆம் ரணில் விக்ரமசிங்க பல்வேறு இராஜதந்திர சிக்கல்களுக்கு மத்தியலும் மீள திருத்தங்களுடன் நிலத்தின் உரிமத்தை இலங்கைக்குப் பெற்று சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கினார். 


தேசிய வளங்களைப் பாதுகாப்பதாக ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் என்ற ஒன்றை வெளியிட்டுள்ளனர்.(Colombo Port City Commission Bill) என்ற இந்த சட்டம் நாட்டின் சுயாதீன இறைமைக்கு பாதிப்பான விடயம் என்பதை எதிர்க் கட்சி சுட்டிக் காட்டுகிறது.இச் சட்டம் மூலம் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பாரிய வீழ்ச்சிக்கே கொண்டு செல்லும்.இது தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வீழ்ச்சியையே வெளிப்படுத்துகிறது.


அரசிலமைப்பின் 76 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு பெறுப்புக் கூறாத போட்டித் தன்மையை வாய்ந்த நிதிக் கட்டளைகள் நிறுவனங்களை உருவாக்க முடியாது எனக் கூறுகிறது.வேறு கற்பிதங்களை அரசாங்கம் முன்வைத்திருந்தாலும் அது ஓர் Federal முறையிலையே நடைமுறைப்படுத்தப்படும் என்றால் அது நாட்டின் இறைமையைப் பாதிப்பதாக அமைகிறது.நிதி தொடர்பான அதிகாரம் ஒன்றித்த நிலையில் பாராளுமன்றத்திற்குரியது.


இச் சட்டத்தில் இந்த நிதி அதிகாரம்  பாராளுமன்றத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் வரவு செலவு விடயங்கள் தொடர்பான பெறுப்பு பாராளுமன்றத்திற்குள்ளது. இச் சட்டம் மூலம் பாராளுமன்ற கண்கானிப்பின் கீழிலிருந்து கொழும்பு துறைமுக நகரத்தை வேறாக்குகிறது.


இவ்வாறான பாதகங்கள் இந்து-லங்கா உடன்படிக்கையில் கூட இருக்கவில்லை.இந்த உடன்படிக்கை கூட பாராளுமன்றத்திற்குட்பட்டே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவாதம் வழங்கியுள்ளது.இவ்வாறான பின்னனியில் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் நாட்டின் இறைமைக்கு பாரிய தீங்குகளை விளைவிக்கும்.இச் சட்டமூலம் ஊடாக இந்த பரப்பினுள் கேசினோ,சூது,சர்வதேச விபச்சாரம் போன்ற சட்டவிரேத வியாபாரங்கள் இடம் பெறலாம்.


இச் சட்டம் ஊடாக நாட்டின் தேசிய வங்கிக் கட்டமைப்பிற்கு புறம்பாக பெறுப்புக் கூறாத வங்கிகளை உருவாக்கும் ஆபத்துள்ளது.அவ்வாறு உருவாக்குமிடத்து சர்வதேச கறுப்புப் பண சலவை இடமாக துறை முக நகரமும் உருவாகும்.


ஒரு நாடு ஒரு சட்டம், விழுமிய கலாசாரம் என்ற என்ற பாரிய கோஷங்களுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று இரு நாடு இரு சட்டத்தை சமர்ப்பித்துள்ளனர்.இது தான் இவர்களின் விழுமியம். 


இச் சட்டத்தில் பிரிதெரு முக்கிய விடயம் தான் இதன் முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.இது பாரிய ஆபத்தான விடயமாகும்.அவர் விரும்பும் ஐந்து நபர்களை பனிப்பாளர் சபையாக நியமிக்கலாம். யாரை நியமிப்பார் என்பது தெரியாத விடயம். அடுத்தது இதன் நிர்வாக முகாமைத்துவ அதிகாரம் சீனாவிற்கு உரித்துடையது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் பிரகாரம் கொழும்பு துறை முக நகரத்திற்குள் உள் நுழையும் ஒருவர் வெளியோரும் போது நுழைவாயிலில் வைத்து சீனாவால் வரி அறவிடப்படும்.நாட்டிற்குள்ளயே ஒரு இடத்திற்கு சென்று வர வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.பாராளுமன்ற சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்ட மூலமாகவே ஐக்கிய மக்கள் சக்தி இதைப் பார்க்கிறது. அரச வருமானத்தை இழப்பதற்கான ஓர் சட்டமூலமாகவே நாங்கள் இதை நோக்குகிறோம். 


நாட்டின் முன்னேற்றத்திற்கு சர்வதேச கடனும்,முதலீடுகளும் அவசியம்.ஆனால் இவ்வாறு நாட்டின் சுயாதீன இறைமையை விற்றுத் தான் பொருளாதாரத்தை கட்டியொழுப்ப  வேண்டும் என்ற தேவை இல்லை என சுட்டிக் காட்டிய அவர்,கொழும்பு துறைமுக நகரம் அவசியம் என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆரம்பத்தில் இதை ஓர் ஆத்தல் நகரமாக உருவாக்க முற்பட்டதை ரணில் விக்ரமசிங்க ஓர் பொருளாதார வலயமாக மாற்றினார் என்று குறிப்பிட்டார்.

இரு நாடு இரு சட்டத்தை சமர்ப்பித்துள்ளனர்.இது தான் இவர்களின் விழுமியம். இரு நாடு இரு சட்டத்தை சமர்ப்பித்துள்ளனர்.இது தான் இவர்களின் விழுமியம். Reviewed by Madawala News on April 06, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.