துபாயில் ஆபாசமாக படம் பிடித்தவர்கள் கைது.. 5,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

துபாயில் ஆபாசமாக படம் பிடித்தவர்கள் கைது.. 5,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு. டுபாயில் வெளிப்பிரதேசத்தில் நிர்வாண வீடியோ  எடுத்துக் கொண்ட சம்பவத்தில் பொது இடத்தில்

ஒழுக்கக்கேடாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.


இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது. அதில் மாடி முகப்பில் பெண்கள் நிர்வாணமாக காட்சி அளித்திருந்தனர்.


இதனை அடுத்தே உள்ளூர் பொலிஸார் செயற்பட்டு இவர்களை கைது செய்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பதினொரு உக்ரைனிய பெண்கள் இருப்பதாக உக்ரைனிய தூதரகம் உறுதி செய்துள்ளது. இதில் ரஷ்ய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


டுபாயில் பொது இடத்தில் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதற்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் 5,000 திர்ஹம் அபராதம் விதிக்க முடியும். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு இதனை விடவும் கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு இராச்சியத்தின் பெரும்பாலான சட்டங்கள் சரியா சட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதோடு ஓரினச்சேர்க்க உறவுகள் மற்றும் இதுபோன்ற குற்றங்களில் கடந்த காலங்களிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் ஆபாசமாக படம் பிடித்தவர்கள் கைது.. 5,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு. துபாயில் ஆபாசமாக  படம் பிடித்தவர்கள் கைது..  5,000 திர்ஹம் வரை  அபராதம் விதிக்க வாய்ப்பு. Reviewed by Madawala News on April 07, 2021 Rating: 5